தேவன் செய்த நன்மைகளை நினைவுகூருங்கள்
நாம் மன்னிக்கப்படும்படி, இயேசு தண்டிக்கப்பட்டார்
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி. என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி. என்
ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்தரி. அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. (சங்கீதம் 103:1-2).
என்ன செய்ய வேண்டும் என்று தாவீதின் ஆவி தன் ஆத்துமாவிடம் சொல்வதை இங்கு நாம் கவனிக்கிறோம்.
என்ன செய்யப்பட வேண்டும் என்பதை தாவீதின் ஆவி நன்கு அறிந்திருந்தது. ஆனால் தாவீதின் ஆத்துமா, அவனுடைய
ஆவியோடு ஒத்திசைந்து, அந்த சவாலை எதிர்கொண்டு செயலாற்றவில்லை என்றால், அது நடக்காது.
எதையெல்லாம் மறக்கக்கூடாது என்று நமக்கு அறிவுறுத்தி, எச்சரிக்கையாகச் சொல்லப்பட்ட நன்மைகளை
சுருக்கமாகத் தொகுத்துப் பார்ப்போம். பல கிறிஸ்தவர்கள் இந்த நன்மைகளை சந்தோஷமாய் அனுபவிப்பதில்லை.
காரணம், அவர்கள் அவற்றை நினைவுகூரத் தவறி விடுகிறார்கள். அடுத்த மூன்று வசனங்களில், தேவனுடைய ஆறு முக்கியமான
நன்மைகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன: அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை
அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னை கிருபையினாலும், இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயை
திருப்தியாக்குகிறார். கழுகுக்கு சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.
(3-5 வசனங்கள்) தேவன் நம்முடைய அக்கிரமங்கள் எல்லாவற்றையும் மன்னிக்கின்றார். அவர் நம் வியாதிகளையெல்லாம் சுகமாக்குகிறார். அவர் நம் வாழ்க்கையை அழிவிலிருந்து மீட்டெடுக்கிறார். அவர் தம்முடைய மிகுந்த காருண்யத்தினாலும்,
மனதுருக்க இரக்கங்களினாலும் நம்மை முடிசூட்டுகிறார். அவர் நம் வாயை நன்மையானவைகளினால் திருப்தியாக்குகிறார்.
கழுகுக்குச் சமமாய், நம் வயதை வாலிப வயதாக்குகிறார். உங்களுடைய வாய் நன்மையானவைகளினால்
நிரம்பியிருப்பதற்கும், கழுகுக்குச் சமானமாய் உங்களுடைய வயது, வாலிப வயதாவதற்கும் இடையே ஒரு நெருங்கிய
தொடர்பு இருக்கின்றது என்றுதான் நான் விசுவாசிக்கிறேன்.
இவ்வுலகத்தினர் பெலவீனமடைந்து, முதிர்வயதை அடைவதைப்போல, தம்முடைய ஜனங்களும்
பெலவீனமடைந்து முதிர்வயதை அடைவது தேவனுடைய சித்தமல்ல என்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன். அதற்காக
முதிர்வயதை நோக்கிச் செல்வதால் எந்த மாற்றமும் உண்டாகாது என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை.
மாறாக, முதிர்வயதின் காலகட்டம், ஒரு தோல்வியின் நேரமாகவோ, பரிதாபமான நிலையில் வாழும் ஒரு நேரமாகவோ, வியாதிப்
படுக்கையில் காலந்தள்ள வேண்டிய கட்டாயமாகவோ இருக்க வேண்டியதில்லை என்ற அர்த்தத்தில் நான் சொல்கிறேன்.
எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. நீர் செய்த நன்மைகளையெல்லாம் நான்
நினைவுகூருகிறேன். நான் மன்னிக்கப்படும்படி, இயேசு தண்டிக்கப்பட்டார் என்றும் அறிக்கை செய்கிறேன்.
ஆமென்...
Leave a comment