முழுமையான இரட்சிப்பு

 

நாம் சுகமடையும்படி, இயேசு காயப்பட்டார்

 

மறுபடியும் பிறக்கின்ற அனுபவம், தனித்துவமான முக்கியத்துவம் உடைய ஒன்றாக இருக்கின்றது. நீங்கள் மறுபடியும்
பிறக்கவில்லை என்றால், உங்களால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கவோ அல்லது அதற்குள் நுழையவோ முடியாது
(யோவான் 3:3-5). ஆனால் இரட்சிப்பு என்பது ஒருமுறையோடு முடிந்து போகிற ஒரு அனுபவம் கிடையாது.

 

இரட்சிப்பு என்பது தொடர்ந்து நடக்கின்ற ஒரு கிரியையாக இருக்கின்றது. இரட்சிப்பின் ஒரு பகுதி, முழுக்கு ஞானஸ்நானம்
பண்ணப்படுவதாகும். நான் எந்த சர்ச்சையையும் உருவாக்க விரும்பவில்லை. நீங்கள் மறுபடியும் பிறந்து, முழுக்கு
ஞானஸ்நானம் பண்ணப்படாமலும் இருக்கலாம். ஆனாலும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்
என்றால், முழுக்கு ஞானஸ்நானம் பண்ணப்படுவதென்பது ஒரு முக்கியமான பங்கெடுத்தலாயிருக்கிறது.

 

காரணம், மாற்கு 16:16 சொல்கிறது: “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்.”
இரட்சிக்கப்படுதல் என்பது, உங்களுடைய ஆத்துமாவை பரலோகத்திற்கென்று ஆயத்தப்படுத்துவது என்பதையும்
தாண்டி, அதற்கும் அப்பாற்ப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. ஒருவர் ஒருமுறை இவ்வாறு சொன்னார்: “கொத்துகொத்தாக
ஆத்துமாக்களை பரலோகத்திற்கென்று ஆயத்தம் செய்வதுதான், இரட்சிப்பைக் குறித்த ஒரு சுவிசேஷகருடைய எண்ணமாக
இருக்கின்றது.”

 

அது ஓரளவிற்கு உண்மையாக இருக்கலாம். ஆனால் இரட்சிப்பு என்பது பரலோகத்திற்கென்று ஆயத்தம்
செய்வதைக் காட்டிலும், இன்னும் அதிக அர்த்தங்கள் அடங்கியதாக இருக்கின்றது.
புதிய ஏற்பாட்டில், “இரட்சிப்பைக்” குறிக்கும்படி, சோஸோ (sozo) என்ற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிற
ஒரு வேதப்பகுதியை நான் ஆராய்ந்து பார்க்க விரும்புகிறேன். வேதவசனங்களில் இந்த வார்த்தை எங்கே வருகின்றது
என்று நாம் பார்ப்போம் என்றால், இரட்சிப்பில் என்ன அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு அது நமக்கு
உதவியாயிருக்கும்.

 

வியாதிப்பட்டவர்களுக்கு இயேசு செய்த சுகமளிக்கும் ஊழியத்தைக் குறித்து மத்தேயு நற்செய்தியில்
எழுதப்பட்டிருக்கிறது. மத்தேயு 14:35-36 வசனங்களை வாசிப்போம்: “அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து,
சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகள் எல்லோரையும் அவரிடத்தில் கொண்டு வந்து, அவருடைய
வஸ்திரத்தின் (ஆடையின்) ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாக வேண்டுமென்று அவரை வேண்டிக்
கொண்டார்கள்.

 

தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள் (முழுமையாய் சுகமடைந்தார்கள்).” இவ்வசனத்தில்
“சொஸ்தமானார்கள்” என்ற இடத்தில், சோஸோ (sozo) என்ற கிரேக்க வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால்
இதற்கு முன், “முழுமையாய்” என்ற அர்த்தமுடைய கிரேக்க முன்னிடைச்சொல் (preposition) எழுதப்பட்டிருக்கிறது. இங்கு
“முழுமையாய் இரட்சிக்கப்படுதல்” என்றால், முழுமையாய் சுகமாக்கப்படுதல் என்று அர்த்தம். இந்த வசனங்கள்,
ஆத்துமாவின் நிலையைக் குறித்து மட்டும் பேசவில்லை. இது வியாதிப்பட்டவர்களைக் குறித்தும் பேசுகின்றது.

 

இயேசுவைத் தொட்ட அத்தனை பேர்களும், முழுமையாய் இரட்சிக்கப்பட்டனர். நம்முடைய இரட்சிப்பு எவ்வளவு
முழுமையானது என்று சிந்தித்துப் பாருங்கள்.

 

எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. நான் முழுமையாய் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன்; நான்
முழுமையாய் சுகமாக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிக்கை செய்கிறேன். நான் சுகமடையும்படி இயேசு காயப்பட்டார் என்றும் அறிக்கை செய்கிறேன்.

 

 

ஆமென்...

 

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment