அவர் நம்முடைய வியாதிகளைச் சுமந்தார்

 

நாம் சுகமடையும்படி, இயேசு காயப்பட்டார்

 

மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். நாமோ அவர்
தேவனால் அடிபட்டு, வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களின் நிமித்தம்
அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டு
பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (ஏசாயா 53:4-5).

 

இந்த மொழிபெயர்ப்பு, வேதாகம மூலமொழிப் பதிப்பின் சரியான அர்த்தத்தை வெளிப்படுத்தவில்லை. இதன்
விளைவாக, கிறிஸ்துவுக்குள் நமக்கு உண்டாயிருக்கிற சரீரப்பிரகாரமான நன்மைகள் பறிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான்
உண்மை. இவ்வசனத்தில் “பாடுகள்” என்ற இடத்தில், “வியாதிகள்” என்ற வார்த்தையும், “துக்கங்கள்” என்ற இடத்தில்
“வலிவேதனைகள்” என்ற வார்த்தையும்தான் உண்மையில் வந்திருக்க வேண்டும்.

 

அடிப்படையில், எபிரெய மூல மொழியில் இந்த வார்த்தைகள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மோசேயின் நாட்களில் பயன்படுத்தப்பட்ட இந்த
வார்த்தைகள், இன்றைக்கும் இதே அர்த்தமுடையவைகளாகத்தான் இருக்கின்றன. இது வேதவசனத்தில் மிகவும் தெளிவாக
எழுதப்பட்டிருக்கிறது: அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் (இயேசுவினிடத்தில்) கொண்டு வந்தார்கள்.

 

அவர் (இயேசு) அந்த ஆவிகளை தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகள் எல்லோரையும்
சொஸ்தமாக்கினார் (சுகமாக்கினார்). அவர் தாமே (இயேசுதாமே) நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு
நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி
நடந்தது (மத்தேயு 8:16-17).

 

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே (இயேசுதாமே) தமது சரீரத்திலே
நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1 பேதுரு 2:24).
மத்தேயு மற்றும் பேதுரு என்ற இருவரும் யூதர்கள். அவர்களுக்கு எபிரெய மொழி தெரியும்.

 

பரிசுத்த ஆவியானவரால் உந்தப்பட்டவர்களாய், அவர்கள் ஏசாயா எழுதிய வார்த்தைகளுக்கு சரியான அர்த்தங்களை இங்கே
கொடுக்கின்றனர். மத்தேயு மற்றும் பேதுரு எழுதிய இவ்விரு வசனங்களையும் நீங்கள் இணைத்துப் பார்ப்பீர்கள் என்றால்,
சரீரம் மற்றும் ஆவிக்குரிய நன்மைகளைக் குறித்து ஏசாயா 53:4-5 வசனங்களில் எழுதப்பட்ட விஷயங்களிலிருந்து மூன்று
முக்கியமான சத்தியங்களை நீங்கள் பெறுவீர்கள்.

 

சரீரப்பிரகாரமான நன்மைகள்: அவர் நம்முடைய பெலவீனங்களை தன் மேல் ஏற்றுக் கொண்டார். அவர்
நம்முடைய வியாதிகளைச் சுமந்து தீர்த்தார். நாம் சுகமானோம்.
ஆவிக்குரிய நன்மைகள்: நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டார். நம்முடைய அக்கிரமங்களின்
நிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நம்முடைய சமாதானத்தை வாங்கும்படி, அதற்கான தண்டனை அவர் மேல் விழுந்தது.

 

எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. சிலுவையில் நீர் கொடுத்த விலைக்கிரயத்திற்காக
உமக்கு நன்றி. நீர் என் பெலவீனங்களையும், என் வியாதிகளையும் ஏற்றுக் கொண்டு என்னைச்
சுகமாக்கியிருக்கிறீர். உமக்கு நன்றி. நான் சுகமடையும்படி இயேசு காயப்பட்டார் என்றும் நான் அறிக்கை செய்கிறேன்.

 

ஆமென்....

 

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment