சுகத்தைப் பெறுவதற்குத் தடையாய் இருக்கும் காரியங்களை அகற்ற வேண்டும்

 

நாம் சுகமடையும்படி, இயேசு காயப்பட்டார்

 

தேவனுடைய ஜனங்கள் வியாதியிலிருந்து சுகத்தைப் பெறுவதற்குத் தடையாய் இருக்கும் காரியங்கள் எவை என்று
தெரியுமா? அவர்களுடைய இருதயத்திலும், வாழ்க்கையிலும் காணப்படுகிற குறைவுகள் அல்லது பிரச்சனைகள்தான்,
அந்தத் தடைகளாக இருக்கின்றன.

 

அப்படிப்பட்ட ஏழு பொதுவான தடைகளைப் பார்க்கலாம்:

 

[1] தேவனுடைய வார்த்தையைக் குறித்த அறியாமை (ஏசாயா 5:13 மற்றும் ஓசியா 4:6 வசனங்களை வாசித்துப் பாருங்கள்).

 

[2] அவிசுவாசம் (எபிரெயர் 3:12-13 வசனங்களை வாசித்துப் பாருங்கள்).

 

[3] அறிக்கையிடாத பாவம் (நீதிமொழிகள் 28:13-ஐ வாசியுங்கள்).

 

[4] பகைவைராக்கியம், காழ்ப்புணர்ச்சி, மற்றவர்களை மன்னியாத வாழ்க்கைமுறை (மாற்கு 11:25-26).

 

[5] அந்நிய தெய்வங்களை பணிந்து ஆராதித்தல் (யாத்திராகமம் 23:24-26)

 

[6] வேதவசனத்திற்கு முரண்பட்ட விதத்தில் உடன்படிக்கைகளைச் செய்தல் (யாத்திராகமம் 23:31-33)

 

[7] ஒரு சாபத்தின் விளைவுகள் (யாத்திராகமம் 28:15-68)

 

சில நேரங்களில், பொல்லாத தீய ஆவிகளால் வியாதிகள் உண்டாகின்றன. லூக்கா நற்செய்தியில் ஒரு
எடுத்துக்காட்டைப் பார்ப்போம். லூக்கா 4:40-41 வசனங்களை வாசிப்போம்: “சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்கள்
எல்லோரும் தங்களுக்குள்ளே பலப்பல வியாதிகளினால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள்.
அவர்கள் ஒவ்வொருவர் மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களை சொஸ்தமாக்கினார் (சுகமாக்கினார்).

 

பிசாசுகளும், ‘நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து,’ என்று சத்தமிட்டு, அநேகரை விட்டுப் புறப்பட்டது. அவரை
கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால், அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்.”
தேவனுடைய இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வல்லமை அங்கே செயல்பட்டபோது, தீய ஆவிகளால் அங்கே நிற்க
முடியவில்லை. அவை வெளியேறி ஓடின.

 

தீய ஆவிகள் பலவிதங்களில் வியாதிகளோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. பெலவீனத்தின் ஆவி, வலிவேதனையின்
ஆவி, முடமாக்குகிற ஆவி, மரணத்தின் ஆவி என பொல்லாத ஆவிகள் பல வழிகளில் கிரியை செய்கின்றன. நான்கை
மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் நிறைய தீய ஆவிகள் உண்டு இயேசு ஒரு பெண்ணை சந்தித்தார்.

 

அவள் எவ்வளவேனும் நிமிர்ந்து நிற்க முடியாத அளவிற்கு கூனியாக இருந்தாள். ஆனால் இயேசு அவளுடைய அந்த நிலையை
சரீர பெலவீனமாகவோ, சரீர நோயாகவோ பார்க்கவில்லை. அவள் ஒரு பெலவீனத்தின் ஆவியினால் பதினெட்டு
வருடங்களாக கட்டப்பட்டிருந்தாள் என்றுதான் இயேசு சொன்னார். பிறகு அவர் அவளை அந்த ஆவியின் பிடியிலிருந்து
கட்டவிழ்த்து விட்டார். உடனடியாக, அவள் நிமிர்ந்து நின்றாள் (லூக்கா 13:11-13).

 

எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. தேவனுடைய இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட வல்லமை
செயலில் இறங்கும்போது, நான் சுகத்தைப் பெறுவதற்கான எல்லாத் தடைகளும் அங்கே விழுந்து போகின்றன
என்று நான் அறிக்கை செய்கிறேன். காரணம், நான் சுகமடையும்படி இயேசு காயப்பட்டார்.

 

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment