கிறிஸ்துவின் கிருபாதார பலி, நம் வாழ்க்கையின் மைய அச்சாயிருக்கிறது

 


நாம் அவருடைய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படி, இயேசு நம்முடைய மரணத்தை மரித்தார்

 

சுவிசேஷத்தின் செய்தியில் கிறிஸ்துவின் கிருபாதார பலியின் பங்கு என்ன என்பதைப் புரிந்து கொள்ளும்படி, ஒரு
சக்கரத்தின் அமைப்பை சிந்தித்துப் பாருங்கள். அடிப்படையில், ஒரு சக்கரத்திற்கு மூன்று முக்கியமான பாகங்கள்
இருக்கின்றன.

 

(1) வெளி வளையம்

(2) மைய அச்சு

(3) ஆரங்கள்.

 

இந்தப் படவிளக்கத்தில், வெளி வளையம், உங்களுடைய
வாழ்க்கையின் இந்தக் காலத்திற்கும், இனி வரும் நித்தியத்திற்கும் தேவையான ஒவ்வொரு ஆவிக்குரிய, சரீர மற்றும்
பொருளாதாரத் தேவைக்கும் தேவன் செய்து வைத்திருக்கிற முழுமையான முன்னேற்பாட்டைச் சுட்டிக் காண்பிகிறது.
ஆரங்கள், சக்கரத்தின் வெளி வளையத்தை தாங்கி நிற்கின்றன. இவை நம் தேவைகளை தேவன் சந்திக்கின்ற
வழிமுறைகளாய் இருக்கின்றன.

 

எடுத்துக்காட்டிற்கு, அவர் மன்னிப்பின் மூலம், சமாதானம் உண்டாவதற்கான வழியை
ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அவர் சுகத்தின் மூலம் நல்ல ஆரோக்கியத்தையும், விடுதலையின் மூலம் சுதந்திரத்தையும்,
நம்மை வேறுபிரிப்பதன் மூலம் பரிசுத்தத்தையும் உண்டாக்கி வைத்திருக்கிறார். இன்னும் எல்லா நன்மைகளையும் அவர்
இவ்விதத்தில் செய்து வைத்திருக்கிறார். இப்பொழுது மைய அச்சு இல்லையென்றால், ஆரங்கள் எதையும் தாங்கி நிற்கப்
போவதில்லை.

 

சக்கரம் சுற்றுவதற்குத் தேவையான சக்தி, மைய அச்சு மூலமாக வருகின்றது. தேவனுடைய
முன்னேற்பாட்டில், கிறிஸ்துவின் கிருபாதார பலிதான், சக்கரத்தின் மைய அச்சாக இருக்கின்றது. அதுதான் கிறிஸ்தவ
ஜீவியத்திற்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கின்றது.

 

தேவனுடைய கிருபையினால், நம் ஒவ்வொருவருக்காகவும் இயேசு மரணத்தை ருசி பார்த்தார் என்று எபிரெயர்
2:9-ம் வசனத்திலிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம். அவர் நம்முடைய இடத்தை எடுத்துக் கொண்டார். நம் மீது வர
வேண்டிய தீமை, அவர் மீது வந்தது. ஏசாயா 53:6 சொல்கிறது: “நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழி தப்பித் திரிந்து,
அவனவன் தன் தன் வழியிலே போனோம். கர்த்தரோ நம் எல்லோருடைய அக்கிரமத்தையும் அவர் மேல் விழப்
பண்ணினார்.”

 

“அக்கிரமம்” என்ற வார்த்தையின் அர்த்தம், “தேவனுக்கு விரோதமான முரட்டாட்டம்” என்பதாகும். ஒட்டுமொத்த
மனுக்குலத்தின் முரட்டாட்டமும் இந்த வார்த்தைக்குள் தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் நம்முடைய முதுகை
தேவனுக்குக் காண்பித்தவர்களாய், நம்முடைய தனிப்பட்ட விருப்பங்களின்படி வாழ்ந்தோம். நம்மை நாமே பிரியப்படுத்திக்
கொண்டோம். நமக்கென்று நாமாகவே ஒரு அளவுகோலை அமைத்துக் கொண்டோம். நாம் நமக்காகவே வாழ்ந்தோம்.

 

நாம் தேவனுக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தவர்களாய், அவருக்குக் கீழ்ப்படியாதவர்களாய் வாழ்ந்தோம். ஆனால் நம்
எல்லோருடைய அக்கிரமத்தையும், முரட்டாட்டத்தையும் தேவன் இயேசுவின் மீது வைத்தார். நம்முடைய
முரட்டாட்டங்கள் அனைத்தும் அவர் மீது குவிக்கப்பட்டது. அவர் சிலுவையில் தொங்கியபோது, நம்முடைய
முரட்டாட்டத்தின் விளைவால் உண்டான எல்லா தீய விளைவுகளும் அவர் மீது வந்தன.

 

வியாதிகளும், நிராகரிப்புகளும், தாங்க முடியாத வலிவேதனைகளும், கடைசியில் மரணமும் அவர் மீது வைக்கப்பட்டன. அவர் தமக்காக மரிக்கவில்லை.
அவர் நம்முடைய மரணத்தை மரித்தார். அவர் நம்முடைய இடத்தில் இருந்து, மரணத்தை ருசி பார்த்தார்.
எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. என்னுடைய முரட்டாட்டத்தை விட்டு நான்
மனந்திரும்புகிறேன். இயேசு என்னுடைய இடத்தில் இருந்து, மரணத்தை ருசிபார்த்தார். இயேசு என்னுடைய மரணத்தை மரித்தார்.

 

அதன் மூலம், நான் அவருடைய ஜீவனைப் பெற்றுக் கொள்கிறேன்.

 

 

ஆமென்.....

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment