இயேசுவோடு அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும்

 

நாம் அவருடைய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படி, இயேசு நம்முடைய மரணத்தை மரித்தார்

 

கிறிஸ்து சிலுவையில் தம்மை நம்மோடு அடையாளப்படுத்திக் கொண்டார். அதையும் தாண்டி நீங்கள் பார்ப்பீர்கள் என்றால்,
மனந்திரும்பி விசுவாசிப்பதன் மூலம், நாமும் கிறிஸ்துவோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அவருடைய
மரணத்தோடு மட்டுமல்ல. அதைத் தொடர்ந்த அவருடைய உயர்வோடும் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.

 

தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய், நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மை கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார். கிருபையினாலே
இரட்சிக்கப்பட்டீர்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின்
மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச் செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை
அவரோடே கூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடே கூட உட்காரவும் செய்தார்.

 

கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு.
முதலில் இயேசு தம்மை நம்மோடு அடையாளப்படுத்திக் கொண்டார். விழுந்துபோன ஆதாமின் சந்ததியாராகிய
நம்மோடு அவர் தம்மை சிலுவையில் அடையாளப்படுத்திக் கொண்டார். அவர் நம்முடைய இடத்தை எடுத்துக் கொண்டார்.

 

அவர் நம்முடைய தண்டனையை தம் மேல் ஏற்றுக் கொண்டார். அவர் நம்முடைய மரணத்தை மரித்தார். அவர்
நம்முடைய குற்றத்திற்கு பரிகாரம் செய்தார். பிறகு விசுவாசத்தில், நாம் நம்மை அவரோடும், அவருடைய மரணத்தோடும்
அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அவருடைய மரணத்திற்குப் பிறகு நடக்கின்ற எல்லாவற்றோடும்கூட நாம் நம்மை
அடையாளப்படுத்திக் கொள்கிறோம்.

 

இயேசுவோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில் இருக்கின்ற மூன்று
முக்கியமான படிகளைக் குறித்து எபேசியர் 2:4-6 வசனங்களில் எழுதப்பட்டிருக்கிறது. முதலில், “தேவன் நம்மை
கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்.” இரண்டாவதாக, “தேவன் நம்மை கிறிஸ்துவோடு கூட எழுப்பினார்.”

 

அவர் நம்மை கிறிஸ்துவோடு கூட உயிரோடு எழச் செய்தார். ஆனால் அது அங்கேயே முடிந்து விடவில்லை. மூன்றாவதாக, “தேவன்
நம்மை உன்னதங்களில் அவரோடு கூட உட்கார வைத்திருக்கிறார்.” தேவன் நம்மை கிறிஸ்துவோடு கூட அவருடைய
சிங்காசனத்தில் அமர வைத்திருக்கிறார். அவர் நம்மை கிறிஸ்துவுக்குள் சிங்காசனத்தில் அமரச் செய்து,
முடிசூட்டியிருக்கிறார்.

 

இயேசுவோடு அடையாளப்படுத்திக் கொள்கிற மூன்று மேல் நோக்கிய படிகளை கவனித்துப் பாருங்கள்: நாம்
அவரோடுகூட உயிர்ப்பிக்கப்பட்டோம்; அவரோடு கூட எழுப்பப்பட்டோம்; அவரோடு கூட சிங்காசனத்தில் உட்கார
வைக்கப்பட்டிருக்கிறோம். மேலே செல்வதற்கான வழி, கீழே செல்வதாகும். கீழான நிலையிலிருந்து, நாம் மேலான,
உன்னதமான, உயர்வான நிலைக்குச் செல்கின்றோம். மிகவும் தாழ்மையானவர்களை தேவன் மிகவும் உயர்வான
நிலைக்குக் கொண்டு செல்கிறார். இந்தக் கோட்பாடு வேதவசனங்கள் முழுவதிலும் காணப்படுகிறது.

 

இது வேதவசனங்களின் ஊடாக, ஒன்றாக கலந்திருக்கிறது. இது ஏதோ ஒரு வரலாற்றின் விஷயமல்ல. இது இந்தப்
பிரபஞ்சத்தின் பிரமாணமாய், அதன் நிறைவேறுதலாய் இருக்கிறது: தன்னைத்தானே தாழ்த்துகிறவன் எவனும்
உயர்த்தப்படுவான். தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான் (மத்தேயு 23:12).

 

எனக்காக சிலுவையில் மரித்தீரே, இயேசுவே, உமக்கு நன்றி. நான் தேவனுக்கு முன்பாக என்னைத் தாழ்த்துகிறேன்.
இயேசுவோடு கூட உயிர்ப்பிக்கப்படும்படி, அவரோடு கூட எழுப்பப்படும்படி, அவரோடு கூட சிங்காசனத்தில் உட்கார
வைக்கப்படும்படி, நான் அவரோடு கூட என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன். இயேசு என்னுடைய மரணத்தை
மரித்தார். அதன் மூலம், நான் அவருடைய ஜீவனைப் பெற்றுக் கொள்கிறேன் என்று அறிக்கை செய்கிறேன்.

 

 

ஆமென்.....

 

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment