டிசம்பர் 28, வனாந்திரத்தில் துதி

துதியின் பலியை இடைவிடாது ஏறெடுப்போம்

2ம்  உலகமகாயுத்தத்தில்,  நான் பிரிடிஷ் ராணுவத்தில் பணியாற்றின போது,  நான் வட ஆப்பிரிக்காவின் வனாந்திரங்களில் பணியமர்த்தப்பட்டேன்.  வனாந்திரத்தின் சூழ்நிலைகளை குறித்த ஓர் குறைபாடு என்னவென்றால்,  அவைகள் முறுமுறுப்பையும், குறைகூறுதலையும் ஊக்குவிக்கும். 

இது இஸ்ரவேல் மக்களுக்கு பல முறைநிகழ்ந்து,  அவர்கள் மேல் தேவனுடைய நியாயத்தீர்ப்பையும், தயையின்மையையும் கொண்டுவந்தது.  நானும் வனாந்திரம், உணவு மற்றும் தூஷிக்கும் பிரிடிஷ் ராணுவ வீரர்களால் சோர்வடைந்தபோது, முறுமுறுக்க ஆரம்பித்தேன். 

இதை நான் செய்தபோது, தேவனுடைய பிரசன்னம் மற்றும் ஆசீர்வாதத்தின் உணர்வை இளந்தேன். 

நான் ஒரு நாளை விசேஷித்துக்கொண்டு,  அன்று  உபாவசித்து,  தேவனிடன் அவர் ஏன் தமது பிரசன்னத்தை என்னைவிட்டு விலக்கிக் கொண்டார் என்று கேட்க தீர்மானித்தேன்.  “தேவனே நீர் ஏன் என் அறுகில் இல்லை? 

வனாந்திரத்தில் நான் ஏன் இந்த சலிப்பூட்டும் சோர்வான வாழ்க்கையை வாழவேண்டும்?” எனக்கேட்டேன்.  மாலைக்குள் தேவன் எனக்கு பதில் கொடுத்துவிட்டார்.  “எனக்கு ஏன் நீ நன்றி சொல்லவில்லை? ஏன் என்னை துதிக்கவில்லை?” என்று மிகதெளிவாக தேவன் பேசினார். 

தேவன் சொன்னதை நான் தியானித்தபோது, நான் நன்றியற்றவனாக மாறினதினால், அவருடைய பிரசன்னத்தின் உணர்வை நான் இழந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன். 

ஏற்றக்காலத்தில், பரிசுத்த ஆவியானவர் இதற்கொத்த அநேக பகுதிகளுக்கு என்னை நடத்தினார்.  அவற்றில் ஒன்று 1 தெசலோனிக்கெயர் 5:16 – 19 : “எப்போதும் சந்தோஷமாயிருங்கள்; இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்; எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 

ஆவியை அவித்துப் போடாதிருங்கள்.” மறுபடியும்,  இங்கே கூறப்பட்டிருக்கும் பிரகாரம், நாம் எப்போதும் சந்தோஷமாயிராமல், இடைவிடாமல் ஜெபம்பண்ணாமல், எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செலுத்தாமலும் இருந்தால், நாம் பரிசுத்த ஆவியை அவித்துப்போடுகிறோம் என்பதே அர்த்தமாகிறது! துதித்து,  நன்றி செலுத்துவதற்கு பதிலாக, நான் முறுமுறுத்து, குறை கூறினதால், நான் என் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரை அவித்துப்போட்டேன். 

நம்முடைய உள்ளங்களில் மாத்திரமல்ல,  நம்முடைய உதடுகளாலும் இடைவிடாமல் துதியின் பலியை ஏறெடுக்கவேண்டும் என தேவன் எதிர்ப்பார்க்கிறார்.  தேவனுடைய நாமத்திற்கு நன்றி செலுத்துவதின் மூலம், நாம் நம்முடைய துதியின் சத்தத்தை எழுப்பவேண்டும்.

நன்றி ஆன்டவரே, உமக்கு துதி செலுத்துகிறேன்.  நான் ஆவியை அவித்துப்போடாமல், எப்போதும் சந்தோஷமாயிருந்து, இடைவிடாமல் ஜெபம்பண்ணி, எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செலுத்துவேன் என அறிக்கைசெய்கிறேன்.  நான் தொடர்ந்து துதியின் பலியை ஏறெடுப்பேன். ஆமென்.