டிசம்பர் 30, துதி சாத்தானை அடக்கிப்போடும்

துதியின் பலியை இடைவிடாது ஏறெடுப்போம்

துதியென்பது, நாம் சாத்தானை அடக்கிப் போடுவதற்கு பயன்படுத்தக்கூடிய ஆயுதமாக இருக்கிறது.  இதை விட முக்கியமான உண்மை, வேதத்தில் இல்லை.  செயல் முறையான கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையில், தேவன் பிசாசின் வாயை அடக்கிப்போட, நமக்கு ஒரு வழியை கொடுத்திருக்கிறார். 

சங்கீதம் 8:2 கூறுகிறது, “பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர்வாயினால் பெலன் உண்டு பண்ணினீர்.”தேவனை நோக்கி  பேசுகிற சங்கீதக்காரன், “சத்துருக்கள்” என்று பன்மையிலும், “பகைஞனும் பழிகாரனும்” என்று ஒருமையிலும் கூறுகிறார். 

“பகைஞனும் பழிகாரனும்” என்பது சாத்தானை தவிற வேறொருவனும் அல்ல; “சத்துருக்கள்” என்பது, நமக்கு விரோதமாக சாத்தான் பயன்படுத்தும் கருவிகளாகிய பொல்லாத ஆவிகள் ஆவன. 

சாத்தான் மற்றும் அவனுடைய பொல்லாத ஆவிகளின் நிமித்தம், தேவன் நமக்கு பெலனை உண்டு பண்ணின்னர்.  இதனால் நாம் சாத்தானை அடக்கி போடலாம்.

இந்த  வசனம் மத்தேயுவின் சுவிசேஷத்தில் இயேசுவால் எடுத்துக்கூறப்பட்டது.  அவர் அதை சொல்லும்போது,  இந்த பகுதியின் முழு  அர்த்தத்தையும் வெளிப்படுத்துகிறார். 

இந்தகாட்சியில், இயேசு ஆலயத்தில் இருக்கிறார், அவர் வியாதிப்பட்டவர்களை சுகமாக்கிக் கொன்டிருக்கிறார், சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!” என்று கூறுகிறார்கள் (மத்தேயு 21:15). 

அக்காலத்தில் இருந்த மததலைவர்களுக்கு அது துக்கமாயிருந்தபடியால், “அவர்கள் சொல்லுகிறதைகேட்கிறீரா?” என்று இயேசுவை கேட்கிறார்கள்.  இப்போது, இயேசு ஒரு வெளிப்பாடை கொடுக்கிறார்:  “ஆம், கேட்கிறேன்.

குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும் படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?” (வசனம் 16).  சங்கீதக்காரன் “பெலனை உண்டுப் பண்ணினீர்” என்று கூறுகிற இடத்தில், இயேசு, “நீர் துதி உண்டாகும்படி செய்தீர்” என்று கூறுகிறார்.

ஆகவே ஒரு எளிய, நேரடி அநுமானம் இங்கு நமக்கு கிடைக்கிறது. யுத்தத்தில் தேவன் தம்முடைய ஜனங்களுக்கு “உண்டாக்கின பெலன்” பூரணமாக்கப்பட்ட துதியாக இருக்கிறது.  பிசாசையும் அவன் பொல்லாத ஆவிகளையும் பூரணமாக்கப்பட்ட துதியினால் நாம் அடக்கிபோட முடியும். 

“குழந்தைகள் பாலகராக”  நாம் தேவனை குறைவற்ற விதத்தில் துதிப்போமானால், பிசாசை அடக்கிப்போடும் ஓர் ஆயுதம் நம்முடைய வாயிலிருந்து புறப்பட்டுவரும்.  தேவன் மகிமைப்படுவார்.

நன்றி ஆன்டவரே, உமக்கு துதி செலுத்துகிறேன்.  “பூரணமாக்கப்பட்ட துதியினால்” நான் பிசாசை அடக்கிப்போட்டு, தேவனை மகிமைப் படுத்துவேன் என்று அறிக்கை செய்கிறேன்.  நான் இடைவிடாமல் துதியின் பலியை செலுத்துவேன். ஆமென்.