நீடிய பொறுமையை பண்படுத்தி வளர்த்திக் கொள்ளுங்கள்

 

நம்முடைய ஓட்டத்தை நீடிய பொறுமையோடே ஓடக்கடவோம்

 

நீடிய பொறுமையோடே ஓடக்கடவோம் என்ற இந்த அறிக்கை, இந்த ஓட்டத்தை வெற்றிகரமாய் ஓடி

 

முடிப்பதற்கு அத்தியாவசியமான இன்னொரு நிபந்தனையைக் குறித்து நமக்குச் சொல்கிறது. இது எபிரெயர்
12:1-ல் எழுதப்பட்டிருக்கிறது. “நீடிய பொறுமை” என்ற நிபந்தனையை நாம் சரியாகப் புரிந்து கொள்ள
வேண்டும். கிறிஸ்தவர்களாகிய நாம் ஆவிக்குரிய வெற்றியையும், நிறைவையும் அடைய வேண்டும்
என்றால், அதற்கு நீடிய பொறுமை என்பது நம்முடைய குணத்தில் இருக்க வேண்டிய மிகவும்
முக்கியமான ஒரு கூறாக இருக்கிறது. எனவே நாம் நீடிய பொறுமையை பண்படுத்தி வளர்த்துக் கொள்ள
வேண்டும்.

 

நீடிய பொறுமைக்கு நேரெதிரான குணம் என்ன? மனந்தளர்ந்து விட்டு விடுதல் அல்லது
ஓட்டத்தை நிறுத்தி விடுதல் என்று நான் நினைக்கிறேன். கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஓட்டத்திலிருந்து
பின் வாங்கி, அதை நிறுத்தி விடுகிறவர்களாக இருக்கக்கூடாது. கிறிஸ்தவர்கள் அதற்கு வாய்ப்பே
கொடுக்கக்கூடாது.

 

தேவன் நம்மிடம் ஒன்றை ஒப்படைக்கிறார் என்றால், அதை வெற்றிகரமாய்
நிறைவேற்றி முடிக்கும்படி நாம் நம்முடைய முகங்களை அதற்கு நேராகத் திருப்ப வேண்டும்.
சுயக்கட்டுப்பாட்டிற்கும், நீடிய பொறுமைக்கும் இடையே நெருக்கமான ஒரு தொடர்பு இருக்கிறது.
சுயக்கட்டுப்பாடு இல்லாமல், நம்மால் நீடிய பொறுமையை பண்படுத்தி வளர்த்துக் கொள்ள முடியாது.

 

நம்முடைய பெலவீனங்களை நாம் மேற்கொண்டு ஜெயிக்க வேண்டும். இல்லையென்றால், ஒவ்வொரு
முறையும், நீடிய பொறுமையின் விஷயத்தில் நாம் சோதிக்கப்படும்போது, உணர்வுப்பூர்வமான,
உளவியல்ரீதியான, சரீரப்பிரகாரமான பெலவீனம் என ஏதாவது ஒரு பெலவீனம் நம்மை மேற்கொண்டு
ஜெயித்து விடும். நம்மை அது கீழே இழுத்து விடும்.

 

அதன் விளைவாக, எங்கே நாம் நீடிய பொறுமையோடு நிலைத்து நிற்க வேண்டுமோ, அங்கே நாம் மனந்தளர்ந்து விட்டு விடுவோம்.
ஓட்டத்தை வெற்றிகரமாய் ஓடி முடிப்பதற்கு அத்தியாவசியமான இன்னொரு நிபந்தனை, நம்
கண்களை இயேசுவின் மீது நிலையாய் பதிப்பதாகும். “விசுவாசத்தைத் துவக்குகிறவரும்,
முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே
ஓடக்கடவோம்.

 

அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல்,
சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (எபிரெயர் 12:1-2).
நாம் எப்பொழுதும் இயேசுவை நோக்கியே பார்க்க வேண்டும். வேறு வார்த்தைகளில், நம்முடைய
சுய பெலத்தையும், சுய ஞானத்தையும் சார்ந்து, இந்த ஓட்டத்தை நாம் ஓட முடியாது.

 

இயேசுவை நோக்கிப் பார்க்க வேண்டும் என்றால், அவரை நம்முடைய எடுத்துக்காட்டாய் பார்க்கிறோம் என்று அர்த்தம்.
நம்முடைய நம்பிக்கையையும், தைரியத்தையும் அவர் மீது வைக்கிறோம். அவரே நம் விசுவாசத்தின்
காரணராய் இருக்கிறார். அவரே நம் விசுவாசத்தை துவக்குகிறவராய் இருக்கிறார். அவரே நம்
விசுவாசத்தைப் பூரணப்படுத்துகிறவராய் இருக்கிறார். அவரே நம்மை வெற்றிக்குள் கொண்டு வருகிறவராய்
இருக்கிறார்.

கர்த்தாவே, நான் “தொடர்ந்து ஓடும்படி,” நீர் எனக்கு உதவி செய்கிறீர். நான் மனந்தளர்ந்து ஓட்டத்தை
நிறுத்தி விட மாட்டேன். என்னை வெற்றிக்குள் கடந்து வரச் செய்கிற இயேசுவின் மீது என் கண்களைப்
பதித்தவனாய், நான் தொடர்ந்து ஓடுவேன். இலக்கை நோக்கி, நீடிய பொறுமையோடு நான் இந்த

ஓட்டத்தை ஓடுவேன்.

 

ஆமென்...