இலவசமாய் நிரபராதியாக்கப்பட்டிருக்கிறோம், நீதிமானாக்கப்பட்டிருக்கிறோம்

 

இயேசுவின் இரத்தத்தின் மூலம், நான் நிரபராதியாக்கப்பட்டிருக்கிறேன்,
ஒருபோதும் பாவம் செய்திராத ஒரு நபராக, நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன்

 

இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு
நீதிமான்களாக்கப்படுகிறார்கள். தேவன் தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாக, கிறிஸ்து
இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக
அவரையே ஏற்படுத்தினார்.

 

(ரோமர் 3:24-26)
இவ்வேதப்பகுதியில் “இலவசமாய்” என்ற வார்த்தை சேர்க்கப்பட்டிருப்பதை நினைத்து நான்
சந்தோஷப்படுகிறேன். மத வைராக்கியம் கொண்டவர்களிடத்தில் பிரச்சனை என்னவென்றால், அவர்கள்
எப்பொழுதும் மீட்பை சம்பாதிக்கும்படி முயற்சிக்கின்றார்கள். ஆகையால்தான் அவர்களால் அதை
ஒருபோதும் பெற முடியவில்லை. அவர்கள் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.

 

அவர்கள் ஒருபோதும் இளைப்பாறுவதில்லை. காரணம், நீதிமானாகும்படி இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செய்ய வேண்டும்
என்ற எண்ணம்தான் எப்பொழுதும் அவர்களுக்குள் இருக்கிறது. இது ஒருபோதும் வேலை செய்யாது.
இயேசுவின் இரத்தத்தை விசுவாசிப்பதன் மூலம் மட்டுமே நாம் நீதிமானாக்கப்படுகிறோம். ரோமர்
4:4-ம் வசனத்தை நாம் வாசிப்போம்: “கிரியை (வேலை) செய்கிறவனுக்கு வருகிற கூலி (சம்பளம்), கிருபை
என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும்.”

 

தாங்கள் எப்பொழுதும் சரியாகத்தான் வாழ்கின்றோம், தங்களுடைய கடமையை ஒழுங்காகத்தான்
செய்கின்றோம், தங்களுக்கு நீதியைத் தர தேவன் கடன்பட்டிருக்கிறார், அது அவர்களுக்குக் கொடுக்க
வேண்டிய கடனாயிருக்கிறது என்றுதான் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால் தேவன்
ஒருவருக்கும் கடனாளி அல்ல என்பதுதான் உண்மை. 5-ம் வசனத்தை வாசியுங்கள்: “ஒருவன் கிரியை
செய்யாமல், பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய
விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.”

 

நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், நம்மை நாமே நீதிமானாக்கும்படி எடுக்கின்ற
முயற்சிகளை நிறுத்த வேண்டும். இன்னும் கொஞ்சம் நீதிமானாகலாம் என்ற முயற்சியை நிறுத்த
வேண்டும். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாறாக, நாம் செய்ய வேண்டியதெல்லாம்,
இயேசுவை விசுவாசிப்பதுதான். இது அவ்வளவு எளிமையானது. இல்லையென்றால், நாம் ஒருபோதும்
அதை அடைய மாட்டோம்.

 

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி. அவருடைய கிருபையினால் இலவசமாய் நான்
நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிக்கை செய்கிறேன். என்னை நீதிமானாக்குகிற தேவன் மீது நான்
விசுவாசம் வைக்கிறேன். என் விசுவாசமே எனக்கு நீதியாக எண்ணப்படுகிறது என்று தேவனுடைய
வார்த்தை சொல்கிறது. இயேசுவின் இரத்தத்தின் மூலம், நான் நிரபராதியாக்கப்பட்டிருக்கிறேன், ஒருபோதும்
பாவம் செய்திராத ஒரு நபராக, நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிக்கை செய்கிறேன்.

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment