தேவனுக்கென்று வேறுபிரிக்கப்படுதல் என்றால் என்ன அர்த்தம்?

 

இயேசுவின் இரத்தத்தின் மூலம், நான் பரிசுத்தமாக்கப்பட்டு,
தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்டிருக்கிறேன்

 

வேறுபிரிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்படுதல் என்பது நீளமான ஒரு இறையியல் வார்த்தையாக இருக்கின்றது.
நாம் இதைப் பிரித்துப் பார்ப்போம். “வேறுபிரிக்கப்படுதல்” என்ற வார்த்தை, வேதாகம மொழிகளில்
“பரிசுத்தம்” என்ற வார்த்தையோடு நேரடித் தொடர்பு கொண்டிருக்கிறது.

 

ஆகையால், “வேறுபிரித்தல்”
என்றால், “பரிசுத்தமாக்குதல்” என்று அர்த்தம். வேறுபிரித்தல் என்ற அர்த்தங்கொண்ட sanctify என்ற ஆங்கில
வார்த்தை, பரிசுத்தவான் என்ற அர்த்தம் கொண்ட saint என்ற வார்த்தையோடு தொடர்புடையதாய்
இருக்கிறது. வேறுபிரிக்கப்படுதல் என்ற வார்த்தை, ஒருவரை பரிசுத்தமாக்குகின்ற கிரியையைக்
குறிக்கின்றது.

 

அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தம்
செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். (எபிரெயர் 13:12).
இயேசு நகரத்துக்குப் புறம்பே தம்மை பாவ நிவாரண பலியாக ஒப்புக் கொடுத்தார் (யோவான் 19:16-
20). தேவனுடைய ஜனங்கள் தங்கியிருந்த பாளயத்திற்கு வெளியேதான் பாவ நிவாரண பலிகள்
செலுத்ததப்பட்டன. இதை நாம் பழைய ஏற்பாட்டில் வாசிக்கின்றோம் (யாத்திராகமம் 29:14).

 

பரிசுத்தமாக்கப்படுதலில் எப்பொழுதும் வேறு பிரிக்கின்ற கிரியையும் நடக்கின்றது.
நம்மை பரிசுத்தமாக்கும்படி, நாம் சரியான அறிக்கையைச் செய்ய வேண்டும்: “இயேசுவின்
இரத்தத்தின் முலம், நான் தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறேன். எல்லாத்
தீமைகளிலிருந்தும் நான் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறேன். எனக்கும் எல்லாத் தீமைகளுக்கும் இடையில்
இயேசுவின் இரத்தம் அரணாய் இருந்து என்னைப் பாதுகாக்கின்றது.”

 

பரிசுத்தமாக்கப்படுகிற நபர், தேவன் மட்டுமே நுழையக்கூடிய, பிசாசு நுழைய முடியாத ஒரு
இடத்தில் வேறுபிரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறார். பரிசுத்தமாக்கப்படுதல் என்றால், சாத்தான்
பிரவேசிக்கக்கூடிய, எளிதாய் அடையக்கூடிய ஒரு இடத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தேவன்
பிரவேசிக்கக்கூடிய, தேவனுக்குப் பயன்படக்கூடிய ஒரு இடத்தில் வைக்கப்படுவதாகும்.

 

பிசாசின் கிரியைக்கு எட்டாத உயரத்தில் வைக்கப்படுகிற ஒரு நிலையாய் இது இருக்கிறது. இதுதான்
தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படுவதாகும்.

 

 

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி.
இயேசுவின் இரத்தத்தின் மூலம், நான் பரிசுத்தமாக்கப்பட்டு,
தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்டிருக்கிறேன்.

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment