ஜனவரி 1, தேவனுடைய வார்த்தையை அறிந்துக்கொள்ளுதல்

தேவனுடைய வார்த்தையை அறிந்துக்கொள்ளுதல்


இயேசுவின் இரத்தம் எனக்காக என்ன செய்கிறதென்று தேவனுடைய வார்த்தை கூறுகிறதோ, அதை நான் சாட்சியாக சாத்தானுக்கு அறிவிக்கிறேன். நாம் சாத்தானை எப்படி மேற்கொள்ள முடியும் என்பதை, தேவன் எனக்கு வார்த்தையின் வெளிப்பாடினால் காட்டினார்.


ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினாலும் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயிக்கவேண்டம் என்று அநேக கிறிஸ்தவர்கள் அறிவார்கள்.
ஆனால் அதை தொடர்ந்து சொல்லும் சொற்றொடராக மாற்றி விடுகிறார்கள்:

“இயேசுவின் இரத்தம் ஜெயம்…இயேசுவின் இரத்தம் ஜெயம்” என்கிறார்கள். அதை நான் குறைகூறவில்லை, ஆனால் சில நேரத்தில் இது பிசாசினிடத்தில் பலன் செய்வது இல்லை.

ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினாலும் சாட்சியின் வசனத்தினாலும் சாத்தானை நாம் எப்படி ஜெயிக்கின்றோம்? மூன்று காரியங்கள் இதில் ஈடுப்பட்டுள்ளன: (இயேசுவின்) இரத்தம், தேவனுடைய வார்த்தை மற்றும் நம்முடைய சாட்சி (அல்லது அறிக்கை).

வெளிப்படுத்தல் 12:11இன் பயன்பாட்டை நான் இப்படியாக விளக்குவேன்: இயேசுவின் இரத்தம் எனக்காக என்ன செய்கிறதென்று தேவனுடைய வார்த்தை கூறுகிறதோ, அதை நான் சாட்சியாக அறிவிக்கும் போது சாத்தானை மேற்கொள்கிறேன்.


இரத்தம் என்ன செய்கிறதென்று வார்த்தை கூறுவதை நான் அறிக்கையிட வேண்டும் என்றால், இரத்தத்தை குறித்து வார்த்தை என்ன சொல்கிறது என்பதை அறிந்திருப்பது அவசியம் என்று நமக்கு தெரியும்.


அடுத்த பலவாரங்களாக, இயேசுவின் இரத்தம் நமக்காக என்னவெல்லாம் செய்கிறதென்று வேதம் கூறுகிறதோ, அதை நாம் பார்க்கபோகிறோம்.


இயேசுவின் இரத்தத்திற்காக நன்றி ஆண்டவரே. இயேசுவின் இரத்தம் எனக்காக என்ன செய்கிறதென்று வார்த்தைகூறுகிறதோ, அதைசாட்சியாக அறிவிப்பதினால், நான் சாத்தானை மேற்கொண்டேன் என்று அறிக்கை செய்கிறேன். இயேசுவின் இரத்தம் எனக்காக என்ன செய்கிறதென்று தேவனுடைய வார்த்தை கூறுகிறதோ, அதை நான் சாட்சியாக சாத்தானுக்கு அறிவிக்கிறேன். ஆமென்.