நமக்குள் தொடர்ந்து நடக்கின்ற சுத்திகரிப்பின் கிரியை

 

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி,

நம்மைத் தொடர்ந்து சுத்திகரிக்கின்றது

 

இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தம் செய்கிற மிக முக்கியமான கிரியை, சுத்திகரிப்பாகும்.
அவர் (இயேசு) ஒளியிலிருக்கிறதுபோல, நாமும் ஒளியிலே நடந்தால், ஒருவரோடொருவர்
ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல
பாவங்களையும் நீக்கி, நம்மை சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)

 

இந்த வேதவசனத்தில், மூன்று வினைச்சொற்கள், தற்காலத்தில் தொடர்ந்து நடக்கின்ற வினையை
(செயலைக்) குறிக்கும் சொற்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நடத்தல், ஐக்கியம் கொள்ளுதல் மற்றும்
சுத்திகரித்தல். இதை நாம் கவனிக்க வேண்டும்.

 

நாம் தொடர்ந்து வெளிச்சத்தில் நடக்கின்றோம் என்றால்,
நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்ந்து ஐக்கியம் கொண்டிருக்கின்றோம் என்றால், அதன் விளைவாக,
இயேசுவின் இரத்தம் தொடர்ந்து நம்மை சுத்திகரித்துக் கொண்டே இருக்கின்றது.

 

இது ஒரு நிபந்தனைக்குட்பட்டது என்பதை நாம் பார்க்க வேண்டும். இது மிகவும் முக்கியம்.
தேவனுடைய வார்த்தையாகிய வெளிச்சத்தில் நாம் தொடர்ந்து நடக்க வேண்டும். தேவனுடைய
வார்த்தைக்கு நாம் தொடர்ந்து கீழ்ப்படிய வேண்டும். அப்பொழுது அதன் முதல் விளைவாக, நாம்
ஒருவரோடு ஒருவர் ஐக்கியம் கொண்டிருப்போம்.

 

நாம் வெளிச்சத்தில் நடக்கவில்லை என்றால், நாம்
ஐக்கியம் கொண்டிருக்க மாட்டோம். நாம் ஐக்கியம் கொண்டிருக்கவில்லை என்றால், நாம் வெளிச்சத்தில்
நடக்கவில்லை என்று அர்த்தம். மாறாக, நாம் வெளிச்சத்தில் நடந்து, ஐக்கியம் கொண்டிருக்கிறோம்
என்றால், இயேசுவின் இரத்தம் தொடர்ந்து நம்மைச் சுத்திகரித்துக் கொண்டே இருக்கும்.

 

இயேசுவின் இரத்தத்திற்காக, கர்த்தாவே, உமக்கு நன்றி. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின்
இரத்தம் என் சகல பாவங்களையும் நீக்கி, என்னைத் தொடர்ந்து சுத்திகரிக்கின்றது. எனவே நான்
தொடர்ந்து வெளிச்சத்தில் நடப்பேன், மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியம் கொண்டிருப்பேன், பாவத்திலிருந்து

சுத்திகரிப்பையும் பெற்றுக் கொள்வேன் என்று அறிக்கை செய்கிறேன்.

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment