நமக்கு அருளப்பட்ட நீதி மற்றும் நம் கிரியைகளில் வெளிப்பட வேண்டிய நீதி

 

விசுவாசத்தினால் நான் நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன்

 

நாம் சந்தோஷப்பட்டு, களிகூர்ந்து அவருக்கு துதி செலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய
கல்யாணம் வந்தது. அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக்
கேட்டேன். சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக் கொள்ளும்படி, அவளுக்கு
அளிக்கப்பட்டது. அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. (வெளிப்படுத்தின
விசேஷம் 19:7-8)

 

இரண்டு கிரேக்க வார்த்தைகள், “நீதி” என்ற அர்த்தம் கொண்டவைகளாய் இருக்கின்றன. ஒன்று,
டிகையோசுனே (dikaiosune). இன்னொன்று, டிகையோமா (dikaioma). டிகையோசுனே என்ற வார்த்தை, நீதியை
கருத்து வடிவத்தில் சுருக்கமாக வெளிப்படுத்துகிறது. டிகையோமா என்ற வார்த்தை, நீதியின் கிரியையை
அல்லது செயலில் வெளிப்படுகிற நீதியை சுட்டிக் காண்பிக்கின்றது. நீங்களும் நானும் இயேசு கிறிஸ்துவின்
மீது விசுவாசம் வைக்கும்போது, அவருடைய நீதி [டிகையோசுனே (dikaiosune)], நமக்கு அருளப்படுகிறது.

 

நாம் அவருடைய நீதியினால் நீதிமான்களாக்கப்படுகின்றோம். இப்பொழுது நம் விசுவாசத்தின் அடிப்படையில் நாம்
வாழும்போது, நமக்கு அருளப்பட்ட இந்த நீதியை, நம் செயல்களில் வெளிப்படுத்துகிறோம் [டிகையோமா
(dikaioma)] அவர் நமக்கு அருளிய நீதியை, நம் கிரியைகளில் நாம் வெளிப்படுத்துகிறோம்.

 

வெளிப்படுத்தின விசேஷம் 19-ம் அதிகாரத்தில் இங்கு “நீதிகளே” என்ற வார்த்தை
பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும். இது சுவாரசியமான ஒன்றாக இருக்கின்றது. நீதியின்
கிரியைகளை குறிக்கின்ற டிகையோமா (dikaioma) என்ற கிரேக்க வார்த்தையின் பன்மை வடிவம்தான்,
டிகையோமாட்டா (dikaiomata) என்ற வார்த்தைதான் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

 

பரிசுத்தவான்களுடைய நீதியின் கிரியைகள்தான், இந்த மெல்லிய வஸ்திரமாக இருக்கின்றது. ஆராய்ந்து பார்க்க வேண்டிய
இன்னொரு வாக்கியமும் இங்கு எழுதப்பட்டிருக்கிறது. “அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்
பண்ணினாள்” என்பதுதான் அது. அவள் இதை தன்னுடைய நீதியின் கிரியைகளினால் செய்து கொண்டாள்.

 

நான் பார்த்திருக்கிற எல்லா கலாச்சாரங்களிலும், திருமண சடங்குகளைக் குறித்த விஷயத்தில் ஒரு
பொதுவான விதி பின்பற்றப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். மணவாளன் ஒருபோதும் மணவாட்டியை
ஆயத்தம் செய்வதில்லை. மணவாட்டிதான் தன்னைத் தானே ஆயத்தம் செய்து கொள்கிறாள்.

 

அந்தப் பொறுப்பு, அவள் மீது மட்டுமே வைக்கப்படுகிறது. கிறிஸ்துவின் மனைவியாகிய சபையானது, தன்னுடைய
நீதியின் கிரியைகளினால் தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கிறது என்று வேதவசனம் சொல்கிறது.
அருளப்பட்ட கிறிஸ்துவின் நீதி, திருமண விருந்தில் கிடைக்காது. நீதியின் கிரியைகள்தான் அங்கு
கிடைக்கும். இலவசமாக நமக்குக் கொடுக்கப்பட்ட கிறிஸ்துவின் நீதி எனும் ஈவின் மூலம், விசுவாசிகளாகிய
நாம் செய்கிற நீதியின் கிரியைகள்தான் அந்த விருந்தை அலங்கரிக்கும்.

 

இயேசுவே, சிலுவையில் உம்மையே தியாகபலியாய் ஒப்புக்கொடுத்தீர். உமக்கு நன்றி. என் விசுவாசத்தின்படி
நான் வாழ்வேன். என் விசுவாசத்தை செயல்களில் வெளிப்படுத்துவேன். எனக்கு அருளப்பட்ட நீதியை என்
கிரியைகளில் நான் வெளிப்படுத்துவேன் என்று நான் அறிக்கை செய்கிறேன். நான் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன் என்றும் அறிக்கை செய்கிறேன்.

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment