தேவனோடு ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறோம்


நான் தேவனோடு ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறேன்;

 

நான் அவருடனே ஒரே ஆவியாய் இசைந்திருக்கிறேன்

 

நம்முடைய ஆவிக்கும், ஆத்துமாவிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியது
அத்தியாவசியமானதாயிருக்கிறது. நம்முடைய ஆத்துமா, தேவனோடு ஒன்றாய் இணைக்கப்படவில்லை.

 

நம்முடைய ஆவிதான் தேவனோடு ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறது. காரணம், தேவனோடு ஒன்றாய்
இணைந்து ஜீவிக்கும்படியே நம் ஆவி உருவாக்கப்பட்டது. உண்மையில், தேவனோடு ஐக்கியத்தில்
இல்லாமல், அதினால் வாழ முடியாது. மறுபடியும் பிறந்து இரட்சிக்கப்படும்போது, மறுபடியும் பிறந்த
விசுவாசியின் ஆவி, தேவனோடு ஒன்றாய் இணைக்கப்படக் கூடியதாய் மாறுகின்றது.

 

நம் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தைக் குறித்து எளிமையான, சுருக்கமான விளக்கத்தை நாம்
அறிந்து கொள்வோம். நம் ஆவி, தேவனைக் குறித்த உணர்வுள்ளதாய் இருக்கிறது. நம் ஆத்துமா, நம்
சுயத்தைக் குறித்த உணர்வுள்ளதாயிருக்கிறது. நம் சரீரம், இவ்வுலகத்தைக் குறித்த உணர்வுள்ளதாயிருக்கிறது.
நம்முடைய ஆவியில், நாம் தேவனைக் குறித்த உணர்வுகளில் மையங்கொண்டு வாழ்கின்றோம்.

 

நம் ஆத்துமாவில், நம் சுயத்தைக் குறித்த உணர்வுகளில் மையங்கொண்டு வாழ்கின்றோம். நம்முடைய சரீரத்தில்,
அதன் ஐம்புலன் உணர்வுகள் மூலம், நம்மைச் சுற்றி இருக்கிற இவ்வுலகத்தோடு தொடர்பில் இருக்கின்றோம்.
நம்முடைய ஆவியானது, தேவனோடு திரும்பவும் இணைக்கப்பட்டபோது, உயிர்ப்பிக்கப்பட்ட நம்
ஆவி, ஒரு விளக்காய் மாறுகின்றது.

 

பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட நிலையில், அது நம் உள்ளான
சுபாவத்தைப் பிரகாசிப்பிக்கின்றது. அதற்கு முன்பு வரை, நம் உள்ளான சுபாவம், அந்தகார
இருளடைந்திருந்தது. அது தேவனிடமிருந்து பிரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. ஒன்றை நாம் நினைவில்
வைத்துக் கொள்ள வேண்டும். வேதாகமம் எழுதப்பட்ட காலத்தில், விளக்கிற்கான எரிபொருளாக, ஒலிவ
எண்ணெய்தான் பயன்படுத்தப்பட்டது. ஒலிவ எண்ணெய் எப்பொழுதும், பரிசுத்த ஆவியானவருக்கு மாதிரியாக,
அடையாளமாக இருக்கின்றது.

 

மனுஷனுடைய ஆவி, கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது. அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம்
ஆராய்ந்து பார்க்கும். (நீதிமொழிகள் 20:27) நம்முடைய ஆவி, திரும்பவும் தேவனோடு இணைக்கப்பட்டபோது, பரிசுத்த ஆவியானவர் உள்ளே
வந்து, அந்த விளக்கை நிரப்புகிறார். நம்முடைய உள்ளான மனுஷனாகிய, நம்முடைய ஆவியாகிய அந்த
விளக்கு, வெளிச்சமேற்றப்படும்போது, அது நம்முடைய உள்ளான பகுதி முழுவதிலும் வெளிச்சத்தைப்
பரப்புகின்றது. அது நம்முடைய உள்ளான பகுதியை பிரகாசிப்பிக்கின்றது. நாம் இனி அந்தகார இருளில் வாழ மாட்டோம்.

 

கர்த்தராகிய இயேசுவே, என்னை உம்மோடு ஒன்றாய் இணைத்துக் கொண்டீர். உமக்கு நன்றி. நான்
கர்த்தராகிய இயேசுவோடு ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறேன். பரிசுத்த ஆவியானவர், என் ஆவியை
பிரகாசிப்பிக்கின்றார். எனவே நான் இனி இருளில் வாழ மாட்டேன். நான் தேவனோடு ஒன்றாய்
இணைக்கப்பட்டிருக்கிறேன் என்றும், நான் அவருடனே ஒரே ஆவியாய் இசைந்திருக்கிறேன் என்றும் அறிக்கை செய்கிறேன்.

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment