ஆவிக்குரிய ஜீவன் வழிந்தோடுவதற்கான வாய்க்கால்கள்

 

நான் தேவனோடு ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறேன்;
நான் அவருடனே ஒரே ஆவியாய் இசைந்திருக்கிறேன்

 

மனுஷனுடைய ஆவி, கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது. அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம்
ஆராய்ந்து பார்க்கும். (நீதிமொழிகள் 20:27) மனுஷனுடைய ஆவி, திரும்பவும் தேவனோடு ஒன்றாய் இணைக்கப்பட்டபோது, பரிசுத்த
ஆவியானவர் உள்ளே வந்து, அந்த விளக்கை நிரப்புகிறார். அப்பொழுது மனுஷனுக்குள் இருக்கின்ற அந்த
விளக்கு, வெளிச்சமேற்றப்படுகிறது. அது அவனுடைய உள்ளான பகுதி முழுவதிலும் வெளிச்சம் வீசுகிறது.

 

அவன் இனி இருளில் வாழ மாட்டான். அது மட்டுமல்ல, அவனுடைய மறுபடியும் பிறந்த ஆவி,
இவ்வுலகத்திற்குள் பரிசுத்த ஆவியானவர் வழிந்தோடக்கூடிய ஒரு வாய்க்காலாக மாறுகின்றது. ஏற்கனவே
நாம் கற்றுக் கொண்ட இந்த சத்தியங்களை இப்பொழுது நினைவுகூருவோம்.

 

யோவான் 7:38-39 வசனங்களில் இயேசு இவ்வாறு சொன்னார். நாம் அதை வாசிப்போம்:
“வேதவாக்கியம் சொல்கிறபடி, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன்
உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்
போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால்
பரிசுத்த ஆவியானவர் இன்னும் அருளப்படவில்லை.”

 

பெந்தேகோஸ்தே நாளன்று, பரிசுத்த ஆவியானவர் பொழியப்பட்ட பிறகு, மனுஷனுடைய மறுபடியும்
பிறந்த ஆவியானது, இவ்வுலகத்திற்குள் ஆவிக்குரிய ஜீவத் தண்ணீர் நிறைந்த நதிகள் வழிந்தோடக்கூடிய
வாய்க்காலாக மாறியது. இது ஒரு ஆச்சரியமான உருமாற்றமாகும்.

 

மேற்கண்ட வாக்கியத்தைப் பேசுவதற்கு முன், 37-ம் வசனத்தில் இயேசு என்ன சொன்னார் என்பதைக் கவனிப்போம்: “ஒருவன் தாகமாயிருந்தால்,
என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்.” ஆக, மறுபிறப்பில் நிகழ்கின்ற இந்த உருமாற்றமும், பரிசுத்த
ஆவியானவரால் உள்ளே நிரப்பப்படுதலும், ஒரு மனுஷனுக்குள் ஆச்சரியமான ஒரு உருமாற்றத்தை
உண்டாக்குகிறது. தாகமாயிருக்கிற ஒரு மனுஷன், தனக்கே போதுமான அளவு இல்லாத இந்த மனுஷன்,
தன்னைச் சுற்றியிருக்கிற தேவைகள் நிறைந்த இவ்வுலகத்திற்குள் ஆவிக்குரிய ஜீவத் தண்ணீர் நிறைந்த
நதிகள் வழிந்தோடக்கூடிய ஒரு வாய்க்காலாக மாறுகின்றான்.

 

கர்த்தராகிய இயேசுவே, என்னை உம்மோடு ஒன்றாய் இணைத்துக் கொண்டீர். உமக்கு நன்றி. தாகம் நிறைந்த
இவ்வுலகத்திற்குள் பரிசுத்த ஆவியானவரின் ஆவிக்குரிய ஜீவத் தண்ணீர் நிறைந்த நதிகள் வழிந்தோடும் ஒரு
வாய்க்காலாய் நான் இருப்பேன் என்று அறிக்கை செய்கிறேன். நான் தேவனோடு ஒன்றாய்
இணைக்கப்பட்டிருக்கிறேன் என்றும், நான் அவருடனே ஒரே ஆவியாய் இசைந்திருக்கிறேன் என்றும் அறிக்கை செய்கிறேன்.

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment