இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறோம்; வேறுபிரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்


நான் விலைக்கிரயம் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறேன்; நான் தேவனுக்குச் சொந்தமானவன்
அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தை பரிசுத்தம் செய்யும்படியாக,
நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். (எபிரெயர் 13:12).

 

இயேசுவின் இரத்தம், ஒவ்வொரு விசுவாசியையும் பரிசுத்தமாக்குகிறது. பரிசுத்தம் என்பது மதம்
சார்ந்த ஒரு வார்த்தையாக இருக்கின்றது. பலர் இதன் அர்த்தத்தைக் குறித்து குழம்பிப் போயிருக்கிறார்கள்.
‘பரிசுத்தமாக்குதல்’ என்ற வார்த்தை, ‘பரிசுத்தவான்’ என்ற வார்த்தையோடு தொடர்புடையதாய் இருக்கிறது.

 

இது வேதாகமத்தின் மூல மொழிகளில், “பரிசுத்தம்” என்ற அர்த்தமுடைய வார்த்தையோடு நேரடியாக
தொடர்பு கொண்டிருக்கிறது. ஆகையால் ‘பரிசுத்தமாக்குதல்’ என்றால், ‘பரிசுத்தவானாக உருவாக்குதல்’ என்று
அர்த்தம். அல்லது ‘பரிசுத்தப்படுத்துதல்’ என்றும் சொல்லலாம். பரிசுத்தத்தில், தேவனுக்கென்று
வேறுபிரிக்கப்படுகிற கிரியை உள்ளடங்கியிருக்கிறது. பரிசுத்தமாக்கப்படுகிற ஒரு நபர், பிசாசு நுழைய
முடியாத, ஆனால் தேவன் மட்டுமே நுழையக்கூடிய ஒரு இடத்திற்குள் சென்று விடுகின்றார்.

 

பரிசுத்தமாக்கப்படுதல் என்றால், சாத்தான் தொடக்கூடிய பகுதியிலிருந்து வெளியேறி, தேவனுக்கு மட்டுமே
பயன்படக்கூடிய ஒரு பகுதிக்குள் கொண்டு செல்லப்படுவதாகும். இதுதான் தேவனுக்கென்று
வேறுபிரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்படுவதாகும். நீதியைப்போல, பரிசுத்தமாக்கப்படுதலும், கிரியைகளினால்,
நம் முயற்சிகளினால் உண்டாவதில்லை. ஒரு மதம் இதை நிறைவேற்றி விட முடியாது. இது
இயேசுவினுடைய இரத்தத்தின் மீது விசுவாசம் வைப்பதன் மூலமாக மட்டுமே வருகின்றது. நீங்கள்
தேவனுக்குச் சொந்தமானவர்களாய் மாறுகின்றீர்கள். நீங்கள் தேவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றீர்கள்.
நீங்கள் தேவனுக்குப் பயன்படக்கூடியவர்களாய் மாறுகின்றீர்கள். தேவனிடமிருந்து வராத எந்தவொரு
விஷயத்திற்கும் உங்களை அணுகுவதற்கு எந்த உரிமையும் இல்லை. இரத்தத்தினால் அதற்கு அனுமதி
மறுக்கப்படுகிறது.
கொலோசெயர் 1:12-13 வசனங்களில் பவுல் இவ்வாறு எழுதியிருக்கிறார்: “ஒளியிலுள்ள
பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின்
அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு
உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்தரிக்கிறோம் (பிதாவுக்கு நன்றி சொல்கிறோம்).”
இயேசுவினுடைய இரத்தத்தின் மீது விசுவாசம் வைப்பதன் மூலம், சாத்தானுடைய அதிகார
எல்கையிலிருந்து நாம் விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறோம்.
நாம் முழுமையாய் தேவனுடைய ராஜ்யத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறோம். நாம் இனிமேல் கொண்டு
வரப்படப் போவதில்லை. நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதுமாய் ஏற்கனவே இடமாற்றம்
செய்யப்பட்டிருக்கிறது. இப்பொழுது நாம் பிசாசின் ராஜ்யத்திற்குள் இல்லை. இப்பொழுது நாம் பிசாசினுடைய
சட்டதிட்டங்களின் கீழ் இல்லை. இப்பொழுது நாம் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திற்குள்
இருக்கின்றோம். இப்பொழுது நாம் அவருடைய சட்டதிட்டங்களின் கீழ் இருக்கின்றோம்.
கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னை விலைக்கிரயம் செலுத்தி வாங்கியிருக்கிறீர். உமக்கு நன்றி. நான்
தேவனுக்கென்று வேறுபிரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிக்கை செய்கிறேன்.
இப்பொழுது நான் தேவனுடைய ராஜ்யத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறேன் என்று அறிக்கை
செய்கிறேன். நான் விலைக்கிரயம் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறேன்; ஆகையால் நான் தேவனுக்குச்

சொந்தமானவன் என்றும் அறிக்கை செய்கிறேன். ஆமென்.

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment