ஒருவர் மற்றவரை சரியாக நடத்துங்கள்

 

நான் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒரு அவயமாய் இருக்கிறேன்

 

இவ்வுலகம் எல்லா வகையான ஜனங்களாலும் நிறைந்திருக்கிறது. ஒருவருடைய வெளித் தோற்றத்தை மட்டுமே பார்த்து விட்டு, “உற்சாகப்படுமளவிற்கு என்னால் ஒன்றையும் பார்க்க முடியவில்லை,” என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் கண்ணாடியைப் பார்த்து விட்டு, ஒருவேளை உங்களைக் குறித்தும் அப்படியே சொல்லலாம். ஆனால் நாம் வெளித்தோற்றத்தையும் தாண்டி, நம்முடைய சகோதர, சகோதரிகளை கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவயங்களாய் பார்க்க வேண்டும். அவர்களுக்காக இயேசு தம்முடைய இரத்தத்தையே சிந்தியிருக்கிறார்.

 

நாம் மற்றவர்களை கனம் பண்ணி, மதிக்கத் தவறினால், அது கர்த்தருடைய இருதயத்தை வருத்தப்படுத்தும். காரணம், கர்த்தர் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார். அவர் அவர்களுக்காக மரித்திருக்கிறார். அவருடைய சரீரத்தின் ஒரு அவயத்தைக் குறித்து தவறான ஒரு மனப்பான்மை நமக்குள் இருக்குமென்றால், நாம் மற்றவர்களை ரொம்பவும் கீழான நிலையில் பார்த்து, அவர்களைக் குறைவாக மதிப்பிடுவோம் என்றால், அது கர்த்தரை மகா வேதனைக்குள்ளாக்கும்.

 

 அதுதான் கொரிந்து சபை ஜனங்களின் பிரச்சனை என்று நான் விசுவாசிக்கிறேன். பவுல் அவர்களுக்கு இரண்டு நிருபங்களை எழுதினார். அவர்களுக்கிடையே நிறைய தவறான உறவுகள் இருந்தன. அவர்கள் ஒருவர் மற்றவரை கர்த்தருடைய சரீரமாக நிதானிக்கவில்லை (1 கொரிந்தியர் 11:29). “இந்தக் காரணத்தினால்தான், உங்களில் பலர் பெலவீனராய், வியாதிப்பட்டிருக்கிறீர்கள். பலர் மரித்து விட்டார்கள்,” என்று பவுல் எழுதினார் (30-ம் வசனம்). இதுதான் இன்றைக்கு கிறிஸ்தவர்கள் வியாதிப்பட்டிருப்பதற்கு முக்கியமான காரணம் என்று நான் நினைக்கிறேன். நான் இதை ஆழ்ந்த வருத்தத்தோடு சொல்கிறேன். இன்று பல கிறிஸ்தவர்கள் சக விசுவாசிகளை கிறிஸ்துவினுடைய சரீரத்தின் சக உறுப்புகளாக மதித்து நடத்துவதில்லை.

 

 

நன்றி இயேசுவே, உம்முடைய சரீரத்தின் ஒரு அவயமாய் நீர் என்னை மாற்றியிருக்கிறீர். உம்முடைய கிருபையினால், நான் மற்றவர்களை கனம் பண்ணுவேன் என்று அறிக்கை செய்கிறேன். இயேசு அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் மரித்தார் என்று நான் அவர்களைப் பார்க்கிறேன். நானும் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒரு அவயமாய் இருக்கிறேன்.

 

 

ஆமென்...

 

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment