நம்மைக் குறித்த தேவனுடைய சித்தம்

நான் பரிசுத்தமாய் இருக்கிறேன்


அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மை சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக, ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்க வேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக் காலம் சிட்சித்தார்கள். இவரோ (தேவனோ) தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். (எபிரெயர் 12:9-10) 


தம்முடைய பரிசுத்தத்தில் நாம் பங்கெடுக்க வேண்டும் என்பது தேவனுடைய விருப்பமாயிருக்கிறது. எபிரெய நிருப ஆசிரியர் தொடர்ந்து சொல்கிறார், "யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லையே" (14-ம் வசனம்).

முதலில், நாம் பரிசுத்தத்தை நாட வேண்டும்.

இரண்டாவதாக, பரிசுத்தத்தை அடையும்படி, நாம் யாவரோடும் சமாதானமாயிருக்கும்படி நாட வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். மற்றவர்களோடு சண்டைகளையும், வாக்குவாதங்களையும் தவிர்த்து, யாவரோடும் சமாதானமாய் வாழும்படி நாம் முயற்சிக்க வேண்டும். எபிரெய நிருப ஆசிரியர் ஒரு கடுமையான எச்சரிக்கையையும் கொடுக்கிறார். நாம் தேவனுடைய பரிசுத்தத்தில் பங்கெடுக்கிறவர்களாய் மாறவில்லை என்றால், நம்மால் கர்த்தரை தரிசிக்க முடியாது என்று அவர் சொல்கிறார்.

தம்முடைய ஜனங்கள் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்ற தேவனுடைய விருப்பத்தைக் குறித்து இன்னொரு வேதவசனமும் இவ்வாறு சொல்கிறது, “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1 தெசலோனிக்கேயர் 4:3). பரிசுத்தம் என்றால் என்ன? ஒரு ஆங்கில வார்த்தை, ‘ify’ என்று முடிந்தால், அதற்கு அர்த்தம், அந்த ‘ify’-க்கு முன் வருகிற வார்த்தையின் தரத்தின்படி ஒன்றை உருவாக்குவதாகும். உதாரணத்திற்கு, ‘purify’ என்றால், ‘(to make pure) சுத்தமாக்குதல்’ என்று அர்த்தமாகும். ‘clarify’ என்றால், ‘(to make clear) ஒன்றைத் தெளிவுபடுத்துதல்’ என்று அர்த்தமாகும். ‘rectify’ என்றால், ‘(to make right) ஒன்றை சீர் செய்தல் அல்லது சரி செய்தல்’ என்று அர்த்தமாகும். அதே போல, ‘sanctify’ என்றால், ‘to make sanct’ என்று அர்த்தம். ஆனால் ‘sanct’ என்றால் என்ன?

இதன் மூல வார்த்தையின் அடிப்படையிலான விளக்கத்தைப் பார்த்தால், பரிசுத்தவான் (saint) என்று சொல்லலாம். பரிசுத்தவான் என்றால், பரிசுத்தத்தோடு சம்பந்தப்பட்ட வார்த்தையாய் இருக்கிறது. Sanctify, saint மற்றும் holy என்ற மூன்று வார்த்தைகளும், ஹேகியோஸ் (hagios) என்ற ஒரு அடிப்படை கிரேக்க வார்த்தையிலிருந்து தருவிக்கப்பட்ட வார்த்தைகளாகும். இது ‘பரிசுத்தம்’ என்பதற்கான வேர்ச்சொல்லாகும். எளிமையாகச் சொன்னால், ‘sanctification’ என்றால், ஒருவரை பரிசுத்தமாக்குதல் என்று சொல்லலாம்.

ஆகையால், 1 தெசலோனிக்கேயர் 4:3-ஐ நாம் இவ்வாறு மொழிபெயர்க்கலாம்: “நீங்கள் பரிசுத்தர்களாய் ஆக்கப்படுவதே, தேவனுடைய சித்தமாயிருக்கிறது.” 
    
நன்றி கர்த்தாவே, நீர் என்னை அழைத்திருக்கிறீர். உமக்கு நன்றி. நான் பரிசுத்தத்தை நாடுகிறேன். உம்முடைய பரிசுத்தத்தில் பங்கடையும்படி, யாவரோடும் சமாதானமாயிருக்கும்படியாகவும் நான் நாடுகிறேன். நான் பரிசுத்தனாய் இருக்கிறேன்.

ஆமென்.........................................