தேவனுடைய நட்புறவு எதன் அடிப்படையில் அமைந்திருக்கிறது?

 

நான் கிறிஸ்துவின் சிநேகிதனாயிருக்கிறேன்

 

ஐயோ! இது வருந்தத்தக்க ஒரு விஷயம். இன்றைக்கு இந்த உலகத்தில் ‘நண்பன்’ என்ற வார்த்தையின் அர்த்தம் நீர்த்துப்
போகச் செய்யப்பட்டிருக்கிறது. இது மலிவான, மதிப்பு குறைந்த ஒரு வார்த்தையாக மாறி விட்டது. நட்புறவின் மதிப்பும்
அவ்வளவு மலிவாக, கீழே இறங்கி விட்டது. ஆனால் தேவனுடைய நட்புறவின் அடிப்படை இன்றளவும்
மாறியிருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அது ஒருபோதும் மாறாது.

 

காரணம், தேவனுடைய நட்புறவு, உடன்படிக்கையின் அர்ப்பணிப்பின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. உடன்படிக்கை
அர்ப்பணிப்பின் மூலம், ஆபிரகாம் தேவனுடைய நண்பனாக மாறினான். இன்று புதிய உடன்படிக்கையின் கீழ், இயேசு
தேவனோடு நம்மை அதே உறவிற்குள் கொண்டு வர விரும்புகிறார். பழைய உடன்படிக்கையின் கீழ், ஆபிரகாம்
தேவனுடைய நண்பனாய் வாழ்ந்ததுபோல, இயேசுவின் மூலம் ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கையின் கீழ், நாமும்
தேவனுடைய நண்பர்களாய் மாறுகின்றோம்.

 

யோவான் 15:15-ல், இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு சொல்கிறார்:
இனி நான் உங்களை ஊழியக்காரரென்று (அடிமைகளென்று) சொல்கிறதில்லை…………நான் உங்களை சிநேகிதர்
என்றேன்.

 

இது ஒரு உயர்வு. அடிமை நிலையிலிருந்து, நண்பர் என்ற நிலைக்கு உயர்த்தப்படுகிற ஒரு நிலையாய் இது
இருக்கின்றது. ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆபிரகாமுக்கு தேவனுடன் உண்டான நட்புறவு, மலிவான
ஒன்றாய் இல்லை. இன்றைக்கு நமக்கும் இது மலிவான ஒன்று கிடையாது. இயேசுவின் நண்பராய் வாழ்வதற்கு நாம் ஒரு
விலைகிரயத்தைச் செலுத்தியாக வேண்டும். ஆபிரகாமுக்கு இந்த நட்புறவின் அடிப்படை எதுவாய் இருந்ததோ, அதே
அடிப்படைதான் இயேசுவோடு நமக்கு உண்டாயிருக்கிற இந்த நட்புறவிற்கும் அடிப்படையாய் இருக்கிறது.

 

இது உடன்படிக்கையின் அர்ப்பணிப்பாக இருக்கின்றது. இயேசு தம்முடைய ஜீவனையே நமக்காக ஒப்புக்கொடுத்தார். யோவான்
15:13-ல், அவர் இவ்வாறு சொன்னார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான
அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இயேசுவின் நண்பர்களாய்
வாழ வேண்டுமென்றால், நாம் நம்முடைய ஜீவனையே அவருக்காக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

 

இது இரு வழி அர்ப்பணிப்பாயிருக்கிறது.

 

இயேசுவே, நீர் என்னை மீட்டிருக்கிறீர். உமக்கு நன்றி. இயேசு தம் ஜீவனையே எனக்காக ஒப்புக்கொடுத்தார். ஆகையால் நானும் என் ஜீவனையே அவருக்காக ஒப்புக்கொடுப்பேன் என்று அறிக்கை செய்கிறேன். நான் கிறிஸ்துவின் சிநேகிதன் என்றும் அறிக்கை செய்கிறேன்.

 

ஆமென்....

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment