ஒரு மனுஷனுடைய கீழ்ப்படிதல்


விசுவாசத்தினால் நான் நீதிமானாகப்பட்டிருக்கிறேன்

 

அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய
கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். (ரோமர் 5:19)

 

ஆதாமின் கீழ்ப்படியாமையினால், அவனும் அவனுடைய சந்ததியார் அனைவரும் பாவிகளாக்கப்பட்டனர். ஆனால்
இயேசுவின் கீழ்ப்படிதலினால், அவரை விசுவாசிக்கிற அனைவரும் நீதிமான்களாக்கப்படுகின்றனர்.

 

இந்த ஒப்பீடு மிகவும் முக்கியம். ஆதாமினுடைய பாவத்தின் விளைவாக, நீங்களும் நானும் உள்பட, எல்லோரும்
பாவிகளானோம். பாவிகள் என்பது நம் அடையாளம் மட்டும் அல்ல. நாம் சுபாவத்தினால் பாவிகளானோம். பாவம், நம்
செயல்களிலும் வெளிபட்டது.

 

இதற்கு இணையாக இன்னொன்றையும் சிந்தித்துப் பாருங்கள். இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தினால் நாம்
நீதிமான்களாக்கப்படும்போது, “பாவி” என்ற அடையாளத்தை எடுத்து விட்டு, “நீதிமான்” என்ற அடையாளத்தை தேவன் நம்
மீது வைக்கவில்லை. மாறாக, சுபாவத்தினால் நாம் நீதிமான்களாக்கப்பட்டிருகிறோம். அது நம் செயல்களிலும் வெளிப்படும்.

 

ஆதாமின் கீழ்ப்படியாமை, நம் எல்லோரையும் பாவிகளாக்கினது எவ்வளவு நிஜமோ, அவ்வளவு நிஜமாய்,
கிறிஸ்துவின் கீழ்ப்படிதல் நம் எல்லோரையும் நீதிமான்களாக்கியிருக்கிறது என்பதும் இருக்கிறது. இது வெறும் எழுத்தில்
அல்ல. இது இறையியல் அல்ல. இது நாம் வாழும் விதத்தில் வெளிப்படுகிறது. இது நமக்குள் ஒரு சுபாவமாகவே
உருவாகியிருக்கிறது.

 

இயேசுவே, உம்முடைய சிலுவை தியாக பலிக்காக உமக்கு நன்றி. உம்முடைய கீழ்ப்படிதலினால், விசுவாசத்தின் மூலம், நான் நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன் என்று அறிக்கை செய்கிறேன்.

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment