தேவனுடைய குமாரனுக்குள் ஜீவன் இருக்கின்றது

 

விசுவாசத்தினால் நான் நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன்

 

நமக்காக சிலுவையில் இயேசுகிறிஸ்து தம்மையே ஒப்புக்கொடுத்த தியாக பலியின் மீது நம் விசுவாசத்தை
வைப்பதன் மூலம், நம்முடைய பாவத்திற்கான தண்டனையை அவர் ஏற்றுக் கொள்ளும்படி இடம்
கொடுப்பதன் மூலம், விசுவாசத்தினால் அவருடைய நீதியைப் பெற்றுக் கொள்வதன் மூலம், நாம்
நீதிமான்களாக்கப்படுகிறோம்.

 

அந்த நீதியை உடையவனாய், எவ்வித எதிர்மறையான பயமோ, நடுக்கமோ
இல்லாமல், நான் தேவனிடம் செல்ல முடியும். என்னால் மரணத்தையும், நித்தியத்தையும் எதிர்கொள்ள
முடியும்.

 

அப்போஸ்தலனாகிய யோவான் தனது முதல் நிருபத்தில், இவ்வாறு எழுதியிருக்கின்றார். 1 யோவான்
5:11-13 வசனங்களை வாசிப்போம். தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில்
இருக்கிறதென்பதே அந்த சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய
குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள்
அறியவும், தேவ குமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவ
குமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.

 

மனிதர்கள் எல்லோருக்கும் தேவன் ஒரு சாட்சியை தந்திருக்கிறார். அவர் நமக்கு நித்திய ஜீவனைத்
தந்திருக்கிறார் என்பதே அந்த சாட்சியாம். இந்த ஜீவன், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள்
இருக்கின்றது. நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்றால், அவருக்குள் நாம் நித்திய
ஜீவனைப் பெற்றிருக்கிறோம் என்று அர்த்தம்.

 

“குமாரனை உடையவன் ஜீவனை உடையவன்,” என்று இவ்வசனத்தில் எழுதப்பட்டிருக்கிற
வார்த்தைகளைக் கவனியுங்கள். இந்த ஜீவன் இப்பொழுது நமக்குள் இருக்கின்றது என்ற அர்த்தத்தில்
இவ்வார்த்தைகள் பேசுகின்றன. இது மரணத்திற்கு பிறகு நடக்கப் போகின்ற ஒரு விஷயம் கிடையாது.

 

இது இப்பொழுதே இவ்வுலத்தில் நமக்குள் உண்டாயிருக்கிற ஒரு காரியமாயிருக்கிறது. அவருடைய ஜீவனைப்
பெறும்படி நீங்கள் மரணம் வரை காத்திருப்பீர்கள் என்றால், நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க
வேண்டியிருக்கும். அது மிகவும் காலதாமதமாகி விடும். இப்பொழுதே இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்! தேவ
குமாரனை உடையவன், ஜீவனை உடையவன். இப்பொழுது நீங்கள் அந்த ஜீவனை உடையவர்களாய்
வாழ்கின்றீர்கள் என்பதை நிச்சயித்துக் கொள்ளுங்கள்!

 

இயேசுவே, சிலுவையில் உம்மையே தியாகபலியாய் ஒப்புக்கொடுத்தீர். உமக்கு நன்றி. நான் தேவ குமாரனை
உடையவனாய் இருக்கின்றேன். எனவே இப்பொழுது அவருடைய ஜீவன் எனக்குள் இருக்கின்றது என்று நான்
அறிக்கை செய்கிறேன். நான் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன் என்றும் அறிக்கை செய்கிறேன்.

 

 

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment