தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்

 

என் சரீரத்தின் அவயங்களை தேவனுடைய நீதியின் ஆயுதங்களாக,
அவருடைய பணிக்கென்றும், அவருடைய மகிமைக்கென்றும்
அவரிடம் இணங்கச் செய்து அர்ப்பணிக்கின்றேன்

 

நாம் எடுக்க வேண்டிய தீர்மானம் ஒன்று இருக்கின்றது. பாவமா அல்லது நீதியா? இவற்றுள் ஏதோ ஒன்று
நம்மை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது, கட்டுப்படுத்த போகின்றது? நீதி என்று நாம் சொல்வோம்
என்றால், நாம் நிச்சயமாக பிசாசினால் சோதிக்கப்படுவோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! வெற்றி
பெறுவதற்கு இன்னும் தனக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று பிசாசு நினைக்கிறான் என்றால், அவன்
தன் முயற்சிகளை நிறுத்த மாட்டான், கைவிட மாட்டான்.

 

ஒரு விசுவாசி பிசாசினால் சோதிக்கப்படுகிறார். அந்தப் பாவச்சோதனை அவரை எந்த விதத்திலும்
அசைக்காத ஒரு இடத்திற்கு அவர் வரும்வரை, பிசாசு தொடர்ந்து சோதித்துக் கொண்டேதான் இருப்பான்.
அந்த விசுவாசி பாவ சிந்தைக்கு சிறிதும் இடம் கொடுக்கவில்லை என்றால், பிசாசு இனியும் இப்படிப்பட்ட
விசுவாசிகளிடம் தன் நேரத்தை வீணடிக்க மாட்டான். தன் நேரத்தை வீணடிக்குமளவிற்கு, அவன் முட்டாள்
அல்ல. ஆனால் இருமனமுள்ள நிலை நமக்குள் காணப்படும் என்றால், பிசாசு அதை தனக்குச் சாதகமாகப்
பயன்படுத்திக் கொள்வான். எனவே நாம் உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

 

உங்கள் மாம்ச பலவீனத்தின் நிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய் பேசுகிறேன். அக்கிரமத்தை
நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும்
அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல,……….. (ரோமர் 6:19).

 

அக்கிரமத்தை நாம் தேர்ந்தெடுப்போம் என்றால், அது பெருகும். நாம் மேலும் மேலும்
அக்கிரமமும், அநீதியும் செய்கிறவர்களாக மாறுவோம். நம்மில் அநேகருடைய வாழ்க்கையில் அது
நிஜமான ஒரு அனுபவமாக இருப்பதை நாம் பார்க்க முடியும்.

 

அக்கிரமச் செய்கைகளில் பெருகுவதற்குப் பதிலாக, “இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி
உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்” (ரோமர் 6:19).
ஆவிக்குரிய ஜீவியத்தில் ஒரு இடத்தில் தேங்கி நிற்பதென்பது சாத்தியமற்ற ஒன்றாயிருக்கிறது.
ஒன்று, நாம் முன்னோக்கிச் செல்வோம் அல்லது பின்னோக்கிச் சென்று கொண்டிருப்போம்.

 

ஒன்று, நாம் பரிசுத்தத்தில் பெருகிக் கொண்டே, முன்னேறிச் செல்வோம் அல்லது கீழ்ப்படியாமையிலும், தேவனுக்கு
விரோதமான முரட்டாட்டத்திலும் பெருகினவர்களாய் பின்னோக்கிச் சென்று கொண்டிருப்போம்.

 

சிலுவையில் நீர் அடைந்த வெற்றிக்காக, இயேசுவே, உமக்கு நன்றி.
உம்முடைய நீதியை நடப்பிக்கின்ற ஒரு அடிமையாக என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.
என் சரீரத்தின் அவயங்களை தேவனுடைய நீதியின் ஆயுதங்களாக, அவருடைய பணிக்கென்றும்,
அவருடைய மகிமைக்கென்றும், அவரிடம் இணங்கச் செய்து அர்ப்பணிக்கின்றேன்.

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment