தேவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார், எங்கும் வியாபித்திருக்கிறார்

 


தேவன் ஒருபோதும் தம் ஜனங்களைக் கைவிட மாட்டார்

 

அவர்களுடைய சந்ததியார் கடற்கரை மணலத்தனையாய் இருப்பார்கள் என்று தேவன் ஆபிரகாமுக்கும், யாக்கோபுக்கும்
வாக்குப் பண்ணினார். இது கடந்த இரண்டாயிரம் வருட வரலாற்றில், இஸ்ரேலில் துல்லியமாக அப்படியே நிறைவேறிக்
கொண்டிருக்கிறது. அலைகள் மிகவும் வலிமையாக அவர்கள் மீது தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு
காலகட்டங்களில், யூதர்கள் மீது சாத்தானும், அவனுடைய எல்லா சக்திகளும், மற்ற மனுஷர்களும் சேர்ந்து பல்வேறு
வகையான எண்ணிக்கையில் அடங்காத ஆக்ரோஷமான தாக்குதல்களை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

 

கடல் பொங்கி, கொந்தளித்தது. அலைகள் மிகவும் வேகமாக எழும்பி, கடற்கரை மணலின் மீது மிகவும் வலிமையாக மோதின. ஆனால்
என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? மணல்தான் எப்பொழுதுமே ஜெயித்திருக்கின்றது. ஏன்? காரணம்,
மணல்தான் ஜெயிக்கும் என்று தேவன் சொல்லியிருக்கிறார். தேவனுடைய வார்த்தையின்படிதான் இது நடந்திருக்கிறது.
\

 

அதாவது தேவனுடைய வார்த்தைதான் ஜெயித்திருக்கிறது.
இன்னொன்றையும் நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய ஜனங்களாகும்படி, யூதர்கள் அதைத்
தீர்மானிக்கவில்லை. தேவன்தான் அதைத் தீர்மானித்தார். அவர்தான் அவர்களைத் தெரிந்து கொண்டார். தேவன் எடுக்கின்ற
ஒவ்வொரு தீர்மானமும் மிகச் சரியான தீர்மானமாகத்தான் இருக்கும் என்று நான் விசுவாசிக்கிறேன். அதற்கு முரண்பட்ட
விதத்தில், அதை முகமுகமாக எதிர்க்கின்ற விஷயங்கள் நிறைய நடக்கலாம். ஆனால் தேவன் அதை மிகச் சரியாகச்
செய்து முடிப்பார். அவர் தம்முடைய ஜனங்களை ஒருபோதும் கைவிட மாட்டார்.

 

அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்
என்பதினால் அல்ல. மாறாக, அவர் தம்முடைய மகத்தான நாமத்தின் நிமித்தம் அதைச் செய்வார். தேவன் தம்முடைய
நாமத்தையே இஸ்ரவேலுக்குக் கொடுத்திருக்கிறார். அது கனயீனமாகும்படி அவர் விட மாட்டார்.
புதிய ஏற்பாட்டில், இயேசுவும் இதே போன்றதொரு உத்தரவாதத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். எபிரெயர் 13:5-ஐ
வாசித்துப் பாருங்கள்: “நான் உன்னை விட்டு விலகுவதில்லை. நான் உன்னைக் கைவிடுவதுமில்லை.” பல நேரங்களில்,
அவருடைய பிரசன்னத்தை எவ்விதத்திலும் நாம் உணராமல் இருக்கலாம்.

 

ஆனால் அவர் தம்முடைய பரிசுத்த ஆவியானவர் மூலம், நம்மோடு கூட இருக்கிறார். நாம் எங்கே சென்றாலும், நாம் எந்த இடத்தில் இருந்தாலும், தேவன்
தம்முடைய பரிசுத்த ஆவியானவர் மூலம் நம்மோடு கூட இருக்கிறார். அவரை நம் கண்களால் பார்க்க முடியாது.
பெரும்பாலான நேரங்களில், அவருடைய பிரசன்னத்தை நம் ஐம்புலன்களினால் உணர முடியாது. ஆனாலும் அவருடைய
பிரசன்னத்திலிருந்து நாம் தப்பிக்கவும் முடியாது. நாம் அதை ஒருக்காலும் தவிர்க்க முடியாது. இது ஒரு அவிசுவாசிக்கு,
அச்சுறுத்தக்கூடிய, பயங்கரமான எண்ணத்தைக் கொடுக்கலாம். ஆனால் ஒரு விசுவாசிக்கு, இது ஆறுதலாய் இருக்கிறது.

 

உறுதியான ஒரு நிச்சயத்தை இது அவருக்குக் கொடுக்கிறது. இது அவரை பெலப்படுத்துகிறது.
தேவனே, நீர் இஸ்ரவேலுக்கு உம்மையே அர்ப்பணித்திருக்கிறீர். உமக்கு நன்றி. இப்பொழுதே நான் அந்த தேசத்திற்காக
பரிந்து மன்றாடி ஜெபிக்கின்றேன். கர்த்தராகிய இயேசு, இஸ்ரவேலுடன் இருப்பதுபோல, அவர் என்னோடு கூட இருக்கிறார்.
அவர் தம்முடைய ஜனங்களை ஒருபோதும் கைவிட மாட்டார் என்று நான் அறிக்கை செய்கிறேன்.

 

ஆமென்...

 

 

Leave a comment

Name

Email address

This is never shown to the public.

Comment