மார்ச் 29 தேவன் இஸ்ரேலுக்கு தம் இரக்கத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கின்றார்

தேவன் ஒருபோதும் தம் ஜனங்களைக் கைவிட மாட்டார்

கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த சமாரிய ஸ்தீரியிடம் இயேசு சொன்ன வார்த்தைகளை, அந்த சத்தியத்தை அங்கீகரித்து, ஏற்றுக் கொள்ள வேண்டியது, நம் எல்லோருக்குமே மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது.

யோவான் 4:22-ம் வசனத்தை வாசிப்போம்: “இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.” யூதர்கள் இல்லாமல், நமக்கு முற்பிதாக்கள் இல்லை, தீர்க்கதரிசிகள் இல்லை, அப்போஸ்தலர்கள் இல்லை, வேதாகமும் இல்லை, இரட்சகரும் இல்லை! இவர்கள் ஒருவருமே இல்லையென்றால், நாம் எவ்வளவு இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளப் போகிறோம்?

ஒரு இரட்சிப்பையும் நாம் பெற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை! மற்ற எல்லா தேசங்களிலும் வாழ்கின்ற எல்லா கிறிஸ்தவர்களும், யூதர்களுக்கு தாங்கள் பட்டிருக்கிற கடனை ஏற்றுக் கொள்ள வேண்டும், அதை திரும்பச் செலுத்தும்படி அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை அவர்கள் செய்ய வேண்டும் என்று வேதாகமம் தெளிவாகப் பேசுகிறது.

இது தேவனுடைய நிபந்தனையாகவும் இருக்கிறது. ரோமர் 11:30-31 வசனங்களில், இந்தக் கடனைக் குறித்து அதுவரை பவுல் தான் சொல்லிக் கொண்டு வந்த விஷயங்களை தொகுத்துச் சொல்கிறார்.

இஸ்ரேலைக் குறித்து புறஜாதியாருக்கு இருக்கும் பொறுப்பையும் குறித்து அவர் இங்கு சொல்கிறார்.

ஆதலால் நீங்கள் (புறஜாதியார்) முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய (இஸ்ரவேலின்) கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல, அவர்களும் (இஸ்ரவேலும்) இப்பொழுதும் கீழ்ப்படியாமலிருந்தும், பின் உங்களுக்கு (புறஜாதியார்) கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள்.

வேறு வார்த்தைகளில் இதை இவ்வாறு சொல்லலாம். இஸ்ரவேல் மூலம், புறஜாதி கிறிஸ்தவர்களாகிய நமக்கு தேவனுடைய இரக்கம் உண்டாயிருக்கிறது.

இப்பொழுது நம் மூலம், இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவனுடைய இரக்கம் காண்பிக்கப்பட வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்.

அதற்கு நாம் ஒரு வழி வாய்ப்பாய் வாழ வெண்டும். நமக்குக் கொடுக்கப்பட்ட இந்தப் பொறுப்பை நாம் எவ்வாறு நிறைவேற்றப் போகிறோம்? பின் வரும் நான்கு காரியங்களை அன்றாடம் செய்வதன் மூலம், நாம் நம் பொறுப்பை நிறைவேற்ற முடியும்.

முதலாவதாக, யூதர்கள் மீது உண்மையான அன்பை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும், அதை நாம் வெளிப்படுத்தவும் வேண்டும்.

இரண்டாவதாக, கிறிஸ்துவுக்குள் தேவன் நமக்குத் தந்திருக்கிற அபரிமிதமான, சம்பூரண ஆசீர்வாதங்களை  நாம் சந்தோஷமாய் அனுபவித்து வாழ வேண்டும். யூதர்கள் அதைக் கண்டு பொறாமைப்பட வேண்டும். அவர்கள் அதை வாஞ்சிக்க வேண்டும்.

மூன்றாவதாக, இஸ்ரவேலுக்கு நன்மை உண்டாகும்படி, நாம் ஜெபிக்க வேண்டும். தேவனிடம் நாம் விண்ணப்பிக்க வேண்டும். அதைச் செய்யும்படி, வேதாகமம் நமக்கு அறிவுறுத்துகிறது (ரோமர் 10:1).

நான்காவதாக, இஸ்ரவேலுக்கு நாம் பட்ட கடனை, அன்பு மற்றும் இரக்கத்தின் நற்செயல்கள் மூலம், திருப்பிச் செலுத்தும்படி நாம் நாட வேண்டும். அன்றாடம் நாம் இதைச் செய்ய வேண்டும்.

தேவனே, நீர் இஸ்ரவேலுக்கு உம்மையே அர்ப்பணித்திருக்கிறீர். உமக்கு நன்றி. இப்பொழுதே நான் அந்த தேசத்திற்காக பரிந்து மன்றாடி ஜெபிக்கின்றேன். யூதர்களுக்கு நான் பட்ட கடனை ஏற்றுக் கொள்கிறேன். அன்றாடம் முயற்சித்து, நான் அதைத் திரும்பச் செலுத்துவேன், இரக்கமும் காண்பிப்பேன் என்று அறிக்கை செய்கின்றேன். தேவன் தம்முடைய ஜனங்களை ஒருபோதும் கைவிட மாட்டார். ஆமென்.