எதினாலும் அசைக்கப்படாதவர்களாய் உறுதியாய் இருப்போம்

 

அசைவில்லாமல் நம்முடைய அறிக்கையை உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கக்கடவோம்
எபிரெயர் 3:1-ல், சரியான அறிக்கையைச் செய்ய வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. பிறகு
எபிரெயர் 4:14-ல், “நம்முடைய அறிக்கையை உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கக்கடவோம்,” என்று நமக்குச்
சொல்லப்படுகிறது. இயேசுவை நம்முடைய பிரதான ஆசாரியர் என்று வேதாகமம் அழைக்கிறது.

 

அப்படியென்றால், நம்முடைய அறிக்கை, நம் சார்பில், அவர் நமக்காக ஊழியம் செய்யும்படி செய்கிறது.
நம்முடைய அறிக்கையை உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கும்படி, நாம் சொல்லியிருக்கிற
காரியத்தை மாற்றக்கூடாது. நாம் நம்முடைய வாயின் வார்த்தைகளை தேவனுடைய வார்த்தையுடன்
ஒத்திருக்கச் செய்ய வேண்டும்.

 

இப்பொழுது நாம் பார்த்துக் கொண்டிருக்கிற காரியம், எபிரெயர் 10:23-ல்
எழுதப்பட்டிருக்கிறது. அது சொல்கிறது, “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில்
அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்.” இந்த வசனத்தில் “அசைவில்லாமல்” என்ற வார்த்தை
சேர்க்கப்பட்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

 

நம்முடைய அறிக்கையோடு சம்பந்தப்பட்ட இந்தக் காரியங்களெல்லாம் எபிரெய நிருபத்தில் ஒரு
வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதை நாம் பார்க்க வேண்டும். அதில் மூன்று தொடர்ச்சியான படி
நிலைகள் இருக்கின்றன. முதல் படி, நாம் அறிக்கையைச் செய்ய வேண்டும்.

 

இரண்டாவதாக, நாம் அறிக்கையை செய்த பின், அதை மாற்றாமல், அதை உறுதியாய் பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
மூன்றாவதாக, நாம் அதை அசைவில்லாமல், அலசடிபடாமல் உறுதியாய் பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
“அசைவில்லாமல்” என்ற வார்த்தை ஏன் அங்கு எழுதப்பட்டிருக்கிறது? என்னுடைய தனிப்பட்ட
அனுபவம் மற்றும் வாதத்தின் அடிப்படையில் நான் இதைச் சொல்கிறேன்.

 

நாம் சரியான அறிக்கையைச்
செய்யும்போது, எதிர்மறையான அழுத்தங்களும், சக்திகளும் நமக்கு எதிராக வரும் என்பது உண்மை. நாம்
சரியான அறிக்கையைச் செய்திருந்தாலும், நாம் அதை உறுதியாய் பற்றிக் கொண்டிருந்தாலும், சாத்தானின்
சக்திகளும், அந்தகாரத்தின் வல்லமைகளெல்லாம் நமக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டதைப்போல தெரிகிற
ஒரு நேரம் வரும்.

 

அந்த நேரத்தில், நம்முடைய அறிக்கையை விட்டு விடலாம் என்பதுபோல ஒரு
சோதனை வரும். ஆனால் இந்த நிருப ஆசிரியர் சொல்கிறார், ‘’விட்டு விடாதீர்கள். அசைவில்லாமல்,
உறுதியாய் பற்றிக் கொண்டிருங்கள்.” சூழ்நிலை எவ்வளவு அந்தகாரமாக இருந்தாலும், பிரச்சனை
எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அசைவில்லாமல் அறிக்கையை உறுதியாய் பற்றிக் கொண்டிருக்க
வேண்டியது மிகவும் அத்தியாவசியமானதாகிறது.

 

தேவன் உண்மையுள்ளவர். அவர் தம்முடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர்
தம்முடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டிருக்கிறார். இயேசுவே நம்முடைய பிரதான ஆசாரியராயிருக்கிறார்.
எனவே நம்முடைய அறிக்கையை அசைவில்லாமல், நாம் உறுதியாய் பற்றிக் கொண்டிருப்போம் என்றால்,
நம்முடைய பிரதான ஆசாரியராகிய அவர் தம்முடைய பணியை நிச்சயம் செய்வார்.

 

 

கர்த்தாவே, உமக்கு நன்றி. நீர் உண்மையுள்ளவர். நீர் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறீர். நான்
என் அறிக்கையைச் செய்கிறேன், அதை மாற்ற மாட்டேன், அசைவில்லாமல் அதை உறுதியாய் பற்றிக்
கொண்டிருப்பேன் என்று விசுவாசித்து அறிக்கை செய்கிறேன். என்னுடைய அறிக்கையை நான்
அலசடிபடாமல், அசையாமல் உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கக்கடவேன்.

 

ஆமென்...