முழு நிச்சயமாய் நம்புங்கள்

 

அசைவில்லாமல் நம்முடைய அறிக்கையை உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கக்கடவோம்

 

சரியான அறிக்கையைச் செய்ய வேண்டும்; அசைவில்லாமல் அலசடிபடாமல் அதை உறுதியாய் பற்றிக்
கொண்டிடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டோடு தொடர்புடைய விதத்தில், ஆபிரகாமின் எடுத்துக்காட்டை
நான் பார்க்க விரும்புகிறேன். பவுல் ஆபிரகாமை ஒரு எடுத்துக்காட்டாய் சித்தரிக்கின்றார்.

 

அலசடிபடாமல் விசுவாசத்தை உறுதியாய் பற்றிக் கொண்டிருந்தவர்களில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ஆபிரகாம்
நிற்கிறார். பவுல் எழுதியதை நாம் வாசிப்போம். ரோமர் 4:19-ஐ வாசிப்போம்:
அவன் விசுவாசத்தில் பலவீனமாயிருக்கவில்லை.

 

அவன் ஏறக்குறைய நூறு
வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப் போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்
போனதையும் எண்ணாதிருந்தான் (தான் நூறு வயதுள்ளவன், சாராளுடைய கர்ப்பம் மரித்துக்
கிடந்த நிலையில் இருந்தது என்ற உண்மையை அவன் விசுவாசத்தில் எதிர்கொண்டான்).

 

மெய்யான விசுவாசம், உண்மைகளை எதிர்கொள்கின்றது. உண்மையை எதிர்கொள்ள விரும்பாத
எந்த ஒரு விஷயமும், மெய்யான விசுவாசமல்ல. ஆபிரகாம் தன்னைத்தானே ஏமாற்றிக்
கொண்டிருக்கவில்லை. அவனுடைய உண்மையான நிலையிலிருந்து முற்றிலும் வித்தியாசமான ஒன்றை
அவன் கற்பனை செய்து கொண்டிருக்கவில்லை. அவனுடைய மனைவி சாராளின் கர்ப்பம் மரித்துக் கிடந்த
நிலையில் இருந்ததைப்போல, அவனுடைய சரீரமும் மரித்துப் போன நிலையில் பெலவீனமாய் இருந்தது
என்பதை அவன் தன் உணர்வுகளின் மூலம் உணர்ந்தான். பவுல் தொடர்ந்து எழுதுகிறார்.

 

ரோமர் 4:20-22 வசனங்களை நாம் வாசிப்போம்:
தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவன்
வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பி,
தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். ஆகையால் “அது அவனுக்கு நீதியாக
எண்ணப்பட்டது.”

 

“விசுவாசிக்கிற எல்லோருக்கும் தகப்பன்,” என்று ஆபிரகாம் அழைக்கப்பட்டான் (ரோமர் 4:11). நாம்
ஆபிரகாமின் விசுவாச அடிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது
(12-ம் வசனம்). அதே விசுவாச பாதையில் நடக்கும்படி நமக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது.
தேவனுடைய வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிக் கொள்ள வேண்டும், நம்முடைய அறிக்கையைச்
செய்ய வேண்டும்.

 

அலசடிபடாமல் அசைவில்லாமல் நம் அறிக்கையை உறுதியாய் பற்றிப் பிடித்துக்
கொள்ள வேண்டும். நம் உணர்வுகள் வெளிப்படுத்துகிற காரியங்களைக் கண்டு ஸ்தம்பித்துப்
போகக்கூடாது, கலங்கி நிற்கக்கூடாது. கண்களால் பார்க்கின்ற சூழ்நிலைகளைத் தாண்டி நாம் பார்க்க
வேண்டும்.

 

கண்களால் பார்க்க முடியாத ஆவி மண்டலத்திற்குள், விசுவாசத்தினால், தேவனுடைய
வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிற நம்முடைய உண்மையான மகா பிரதான ஆசாரியரை நோக்கி நாம் பார்க்க
வேண்டும். இதையெல்லாம் செய்ய வேண்டுமென்று, தேவன் தம்முடைய வார்த்தையில் நமக்கு
அறிவுறுத்தியிருக்கிறார்.

 

கர்த்தாவே, உமக்கு நன்றி. நீர் உண்மையுள்ளவர். நீர் எனக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறீர்.
அவிசுவாசத்தினால் அலசடிபடாமல், உண்மைகளை நான் விசுவாசத்தோடு எதிர்கொள்வேன் என்று நான்
அறிக்கை செய்கிறேன். என்னுடைய அறிக்கையை நான் அலசடிபடாமல், அசையாமல் உறுதியாய் பற்றிக் 
கொண்டிருக்கக்கடவேன்.

 

ஆமென்...