அக்டோபர் 4, கர்த்தருக்கு நினைப்பூட்டிக் கொண்டே இருங்கள்

எருசலேமின் சமாதானத்திற்காக ஜெபம் செய்யுங்கள்: "எருசலேமே, உன்னை நேசிக்கிறவர்கள் சுகமாய் வாழ்ந்திருப்பார்களாக."

ஏசாயா 62-ல், குறிப்பாக, எருசலேமிற்காக உறுதியாய், தீவிரமாய், இடைவிடாமல், தொடர்ந்து ஜெபிக்க வேண்டும் என்று தேவன் நமக்கு அழைப்பு கொடுக்கிறார்:

எருசலேமே, உன் மதில்களின் மேல் பகல் முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம் பண்ணுகிறவர்களே (கர்த்தரை நோக்கி கூப்பிடுகிறவர்களே), நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது.

அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்க விடாதிருங்கள். (ஏசாயா 62:6-7).

புதிய ஏற்பாட்டில், அநீதியான நீதிபதியைக் குறித்த ஒரு உவமையை இயேசு சொல்கிறார். ஒரு விதவை தனக்கு நீதி கிடைக்கும்படி அவனை இடைவிடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறாள்.

இயேசு முடிவில் ஒரு கேள்வியை முன் வைக்கிறார்: "அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும், பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து, அவர்களுக்கு நியாயம் செய்யாமலிருப்பாரோ?" (லூக்கா 18:7). இந்த இரண்டு வேதப்பகுதிகளும் ஒன்றை நமக்குச் சுட்டிக் காண்பிக்கின்றன.

சில விஷயங்களுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டியது, உடனடித் தேவையாயிருக்கிறது. அவை அவ்வளவு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவற்றிற்காக, நாம் பகல் நேரத்தில் மட்டுமே ஜெபித்தால் போதாது. இரவு நேரங்களிலும், நாம் அவற்றிற்காக நிச்சயம் ஜெபிக்க வேண்டும். எருசலேம் திரும்பவும் மீட்கப்பட வேண்டிய விஷயம், அவற்றில் ஒன்றாக இருக்கிறது.

ஏசாயா இந்த ஜாமக்காரரை (வாட்ஸ்மேன்களை), "கர்த்தரை நோக்கி கூப்பிடுகிறவர்கள் அல்லது ஜெபிக்கிறவர்கள்" என்று அழைக்கிறார். "பிரஸ்தாபம் பண்ணுதல் அல்லது அழைத்தல்" என்ற வார்த்தைக்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம் சுவாரசியமானது.

"கர்த்தருக்கு நினைவூட்டுதல்" என்பதுதான் அதன் அர்த்தம். தற்கால எபிரெய மொழியில், இவ்வார்த்தை செகரட்டரி அல்லது செயலாளரைக் குறிக்கும் வார்த்தையாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு செகரட்டரியின் மிக முக்கியமான ஒரு வேலை, கம்பெனி முதலாளியின் கால அட்டவணைப்படி, அவருடைய வேலைகளை அவருக்கு நினைப்பூட்டுவதாகும்.

இது எருசலேமிற்காக நாம் எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதைக் குறித்த ஒரு வெளிச்சத்தை, விளக்கத்தை நமக்குக் கொடுக்கிறது. அவருடைய "பரிந்து மன்றாடுகிற செகரட்டரிகளாகிய" நமக்கு இரண்டு முக்கியமான பொறுப்புகள் உண்டு. முதல் பொறுப்பு, அவருடைய தீர்க்கதரிசன கால அட்டவணையைக் குறித்து நாம் நன்கு அறிந்திருக்க வேண்டும்.

இரண்டாவது பொறுப்பு, அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிற அவருடைய வேலைகளைக் குறித்து நாம் அவருக்கு நினைப்பூட்ட வேண்டும்.

அதில் ஒரு முக்கியமான வேலை, இஸ்ரேலை திரும்ப மீட்டு, எருசலேமை திரும்பக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தேவனுடைய கடைசி கால வேலையாகும். இதைச் செய்யும்படி, தேவன் தம்மையே அர்ப்பணித்திருக்கிறார்.

"எருசலேமே, உன்னை நேசிக்கிறவர்கள் சுகமாய் வாழ்ந்திருப்பார்கள்." நன்றி கர்த்தாவே, இஸ்ரேலை நேசிக்கிறவர்களுக்கு நீர் தந்திருக்கிற இந்த வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. எருசலேமை தேவன் ஸ்திரப்படுத்தி, அதை பூமியிலே புகழ்ச்சியாக்கும்வரைக்கும், நான் கர்த்தருக்கு நினைப்பூட்டுகிற வேலையைச் செய்வேன் என்று அறிக்கை செய்கிறேன். எனவே, நான் எருசலேமைக் குறித்த அக்கறையோடு, அதன் சமாதானத்திற்காக உம்மிடம் ஜெபிக்கிறேன். ஆமென்.