இளைப்பாறுங்கள் என்று தேவன் நமக்குக் கொடுக்கிற கட்டளை

கிறிஸ்துவுக்குள் உண்டான இளைப்பாறுதலை, நாம் தவற விட்டு விடாதபடி, பயந்திருக்கக்கடவோம்

உபாகமம் 28-ம் அதிகாரத்தில், ஆசீர்வாதங்கள் மற்றும் சாபங்கள் அடங்கிய ஒரு பட்டியலை நாம் பார்க்கிறோம். “உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய் செவிகொடுப்பாயானால்………………………

நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன் மேல் வந்து உனக்கு பலிக்கும்,” என்ற வார்த்தைகளோடு ஆசீர்வாதங்கள் ஆரம்பிக்கின்றன (1-2 வசனங்கள்).

“அவர் சத்தத்திற்கு செவிகொடாதே போவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன் மேல் வந்து, உனக்குப் பலிக்கும்,” என்ற வார்த்தைகளோடு சாபங்கள் ஆரம்பிக்கின்றன (15-ம் வசனம்).

இவை கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடுப்பதிலோ அல்லது அதை அலட்சியப்படுத்துவதிலோ தொங்கி நிற்கின்றன.

மெய்யாகவே நாம் தேவனுடைய சத்தத்தைக் கேட்கிற ஒரு உறவிற்குள்ளும், சிந்தைக்குள்ளும் ஆராதனையின் மூலமாகத்தான் நுழைகின்றோம். ஆராதனையில் கீழ்ப்படிவதுதான், இதற்கென்று தேவன் நியமித்த ஒரே வழியாக இருக்கிறது.

அல்லது, இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம். ஆராதனையின் சிந்தை நமக்குள் இருக்கவில்லை என்றால், நம்மால் தேவனுடைய சத்தத்தைக் கேட்க முடியாது. இதற்கு நம்மை உட்படுத்தி, தேவனுடைய சத்தத்தை நாம் கேட்கும்போது, நாம் அவருடைய இளைப்பாறுதலுக்குள் நுழைகின்றறோம்.

ஆக, ஆராதனைதான் இளைப்பாறுதலுக்கான ஒரே வழியாக இருக்கிறது. தேவனை எவ்வாறு ஆராதிக்க வேண்டும் என்பதை மெய்யாகவே அறிந்தவர்கள் மட்டுமே, இளைப்பாறுதலை சந்தோஷமாக அனுபவிக்கிறார்கள்.

ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில் அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.

ஆகையால் அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம். (எபிரெயர் 4:9-11)

கீழ்ப்படியாமையினாலே, தேவனுடைய ஜனங்கள் இந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கத் தவறினார்கள் என்ற உண்மையை வேதவசனம் வெளிக்கொண்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமையை ஓய்வுநாளாக நாம் அனுசரிக்க வேண்டும் என்பதைக் குறித்து நான் இங்கு வலியுறுத்திப் பேசவில்லை. இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும்படி தேவன் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்ற உண்மையை நாம் தவற விட்டு விடுவோம் என்ற எச்சரிக்கையைத்தான் நான் இங்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

 

ஒரு வாரத்தின் ஏழு நாட்களும், ஒவ்வொரு வாரமும் நான் மும்முரமாக என் வேலையில் ஈடுபடுகிறேன் என்றால், அதன் மூலம் நான் தேவனைப் பிரியப்படுத்தவில்லை என்றுதான் நான் விசுவாசிக்கிறேன்.

அப்படிப்பட்ட பரபரப்பான வாழ்க்கை என்னுடைய ஆரோக்கியத்தை நிச்சயம் பாதிக்கும், ஆபத்தை உண்டாக்கும். ஓய்வுநாள் இளைப்பாறுதலைக் குறித்து, தேவன் என் இருதயத்தில் ஒரு கிரியையைச் செய்து கொண்டிருக்கிறார்.

உங்களுடைய இருதயத்திலும் தேவன் ஒரு கிரியை செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். அது அவருடைய பரலோக, நித்திய, ஒருபோதும் மாறாத பிரமாணங்களை நீங்கள் இயல்பாகக் கடைபிடித்து வாழும்படி உங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்.

உம்முடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும்படி தந்திருக்கிற வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி, கர்த்தாவே. “அந்த இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும்படி, நான் எல்லா முயற்சிகளையும் எடுக்கின்றேன்,” என்று தீர்மானித்து, அறிக்கை செய்கிறேன். கிறிஸ்துவுக்குள் உண்டான இளைப்பாறுதலை தவற விட்டுவிடாதபடி, நான் எச்சரிக்கையாயிருக்கிறேன். ஆமென்.