நம் இருதயமும், நம் வாயும்

 

நம்முடைய அறிக்கையை உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கக்கடவோம்

 

புதிய ஏற்பாட்டில் மற்ற இடங்களில் சொல்லப்பட்டிருப்பதைப் போலவே, ரோமர் 10-ம் அதிகாரத்திலும்,
இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு என்ன தேவை என்பதை பவுல் அவ்வளவு தெள்ளத் தெளிவாக
விளக்கிச் சொல்லியிருக்கிறார். அவர் இவ்வாறு அங்கே ஆரம்பிக்கிறார்,
“இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும், உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும்
சொல்கிறது.

 

இந்த வார்த்தை, நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை
மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால், இரட்சிக்கப்படுவாய்”
(ரோமர் 10:8-9).

 

தேவனுடைய வார்த்தைதான், இரட்சிப்பிற்கான அடிப்படையாக இருக்கிறது. அதை விசுவாசத்தின்
மூலமாக மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு இரண்டு காரியங்களை நாம் செய்தாக வேண்டும்.
ஒன்றை இருதயத்திலும், இன்னொன்றை வாயின் மூலமாகவும் நாம் செய்ய வேண்டும். நாம் நம்
இருதயத்தில் விசுவாசிக்க வேண்டும்.

 

ஆனால் நம் வாயின் மூலமாக, நாம் அதை அறிக்கை செய்யவும்
வேண்டும். நம் வாயைத் திறந்து நாம் அதைப் பேச வேண்டும். பவுல் தொடர்ந்து சொல்கிறார்,
நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும். இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை
பண்ணப்படும். (ரோமர் 10:10)

 

இங்கேயும் பாருங்கள், அறிக்கை இல்லையென்றால், இரட்சிப்பு இல்லை. இருதயத்தில்
விசுவாசிப்பது நல்லதுதான். ஆனால் அவ்வாறு விசுவாசிப்பது மட்டும் போதாது. நம்முடைய
இருதயங்களில் நாம் விசுவாசித்தால் மட்டும் போதாது. நம் வாயைத் திறந்து, தைரியமாய் நாம் அதைப்
பேச வேண்டும். நம்முடைய வாயின் வார்த்தைகளை, தேவனுடைய வார்த்தையோடு ஒத்திருக்கச்
செய்யவும் வேண்டும்.

 

நம்முடைய ஆரம்ப அறிக்கை, பிரதான ஆசாரியராகிய இயேசுவோடு நம்மைத்
தொடர்புபடுத்தி, இணைக்கிறது. ஆனால் அதோடு முடிந்து விடவில்லை. பிரதான ஆசாரியராய்
நம்முடைய சார்பில் நமக்காக இப்பொழுது அவர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற ஊழியம், இப்பொழுது
நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற அறிக்கையைச் சார்ந்திருக்கிறது.

 

 

இயேசுவே, உமக்கு நன்றி. காரணம், நீரே எங்களுடைய அறிக்கையின் மகா பிரதான ஆசாரியராய்
இருக்கிறீர். எனக்காக தேவன் வைத்திருக்கிற வாக்குத்தத்தங்களை நான் என் இருதயத்தில் விசுவாசித்து,

என் வாயினால் அறிக்கை செய்வேன் என்று நான் தீர்மானிக்கிறேன்.
ஆகையால் என் அறிக்கையை நான் உறுதியாய் பற்றிக் கொண்டிருக்கக்கடவேன்.

 

ஆமென்...