செப்டம்பர் 8, நாம் கேட்கும்போது பெற்றுக் கொள்கிறோம்
நான் அவரிடம் கேட்பதற்கு முன்பே, எனக்கு என்ன தேவை என்பதை என் பிதா அறிந்திருக்கிறார்
பெற்றுக் கொள்வதுதான், தேவனிடமிருந்து நன்மைகளைப் பெறுவதில் இருக்கும் மிக முக்கியமான இரகசியங்களில் ஒன்றாக இருக்கிறது. நிறைய பேர் ஜெபிக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் அவர்கள் பெற்றுக் கொள்வதில்லை.
பெற்றுக் கொள்கிற இந்தக் கோட்பாட்டைக் குறித்து முக்கியப்படுத்தி வலியுறுத்திப் பேசுகிற ஒரு வேதவசனத்தை நாம் பார்ப்போம். தேவனிடம் ஜெப விண்ணப்பம் செய்வதைக் குறித்து இயேசு இதில் பேசுகிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்:
“ஆதலால் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்கிறேன்.” (மாற்கு 11:24)
இதை நியூ இன்டர்நேஷனல் மொழிபெயர்ப்பு இவ்வாறு சொல்கிறது, “நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள்.” இதுதான் எழுத்தின்படியே சரியான மொழிபெயர்ப்பாகும்.
நாம் ஜெபிக்கும்போது, நாம் கேட்ட காரியங்களையே நாம் பெற்றுக் கொள்கிறோம். நீங்கள் இவ்விதத்தில் ஜெபிக்கும்போது, அதாவது நீங்கள் ஜெபிக்கும்போது, நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள் என்று விசுவாசித்து ஜெபிக்கும்போது, நீங்கள் எதற்காக ஜெபித்தீர்களோ, அதையே பெற்றுக் கொள்வீர்கள்.
பெற்றுக் கொள்வதும், அதை உடையவர்களாய் கொண்டிருப்பதும் ஒன்றாகாது. பெற்றுக் கொள்வதென்றால், அங்கே அது முடிந்து விட்டது. கிடைக்குமா, கிடைக்காதா என்ற பேச்சுக்கு இடமில்லை. அது கிடைத்து விட்டது.
ஆனால் அதை உடையவர்களாய் கொண்டிருப்பது, அதற்குப் பின் வரும் அனுபவமாகும். உங்களுக்கு ஒரு பணத்தேவை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஜெபிக்கிறீர்கள். நீங்கள் ஜெபத்தில் தேவனோடு பேசுகிறீர்கள்.
“தேவனே, வியாழக்கிழமையன்று, எங்களுக்கு 1500 டாலர்கள் தேவைப்படுகிறது,” என்று நீங்கள் சொல்கிறீர்கள். பிறகு நீங்கள் சொல்கிறீர்கள், “தேவனே, உமக்கு நன்றி.” அப்பொழுதே நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள்.
ஆனால் இப்பொழுது உங்களுடைய சூழ்நிலைகளில் எதுவும் மாறி விடவில்லை. ஆனாலும் நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்கள். நிச்சயம், அந்தப் பணம் உங்களுக்குக் கிடைத்து விடும்.
பிதாவாகிய தேவனே, நீர் என்னை முழுமையாய் அறிந்திருக்கிறீர். உமக்கு நன்றி. நான் ஜெபிக்கும்போது, நான் எதற்காக ஜெபிக்கிறேனோ, அதையே நான் பெற்றுக் கொள்கிறேன். காரணம், நான் அதைப் பெற்றுக் கொள்ளும்போது, அங்கேயே அது முடிந்து விடுகிறது என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அவரிடம் கேட்பதற்கு முன்பே, எனக்கு என்ன தேவை என்பதை என் பிதா அறிந்திருக்கிறார். ஆமென்.