செப்டம்பர் 21, பாடுகள் படுகிறோம், ஆளுகையும் செய்கிறோம்

“அப்பா, பிதாவே” என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியை நான் பெற்றிருக்கிறேன்

“ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்,” என்று பவுல் ரோமர் 8:18-ல் எழுதுகிறார்.

கிறிஸ்துவோடு கூட ஆளுகை செய்ய வேண்டும் என்று நாம் விரும்பினால், அவரோடு கூட பாடுகள் படுவதற்கும் நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும். 2 தீமோத்தேயுவில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்:

இந்த வார்த்தை உண்மையுள்ளது. என்னவெனில், நாம் அவரோடே கூட மரித்தோமானால், அவரோடே கூட பிழைத்துமிருப்போம். அவரோடே கூட
பாடுகளைச் சகித்தோமானால், அவரோடே கூட ஆளுகையும் செய்வோம். நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார். நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர் தம்மைத்தாம் மறுதலிக்க மாட்டார். ( 2 தீமோத்தேயு 2:11-13)

ஆக, நாம் பாடுபடுவோம் என்றால், நாம் ஆளுகையும் செய்வோம் என்பதை இவ்வசனங்களில் பார்க்கிறோம். ஆனால் நாம் இயேசு கிறிஸ்துவை மறுதலிப்போம் என்றால், அவரும் நம்மை மறுதலிப்பார்.

நம்முடைய வாழ்க்கையில் பல நேரங்களில், ஒன்று, அவரோடு கூட பாடுபட வேண்டும், இல்லையென்றால், அவரை மறுதலிக்க வேண்டும் என்ற ஒரு சவால் நமக்கு முன் வந்து நிற்கும்.

ஆனால் இதற்கான தீர்வு, நமக்கு முன்பாக தெளிவாக வைக்கப்பட்டிருக்கிறது (எடுத்துக்காட்டிற்கு, பின் வரும் வசனங்களை வாசித்துப் பாருங்கள்: அப்போஸ்தலர் நடபடிகள் 14:22; பிலிப்பியர் 1:29-30; 2 தெசலோனிக்கேயர் 1:4-10).

வேதாகமத்தில் காணப்படும் ஒரு அழகான படத்தை உங்களுக்கு முன் விளக்கிக் காண்பிக்க விரும்புகிறேன். இது ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து வெளிப்படுகிறது. இது குறிப்பாக, பிரதான ஆசாரியனின் வஸ்திரங்களில் காணப்படும் மூன்று முக்கியமான நிறங்களைக் குறித்ததாயிருக்கிறது.

நீல நிறம், ஊதா மற்றும் இராத்தாம்பரம் (கருஞ்சிவப்பு) என்ற மூன்று நிறங்கள்தான் அவை. ஊதா என்பது பரலோகத்தின் மாதிரியைக் காண்பிக்கும் நிறமாயிருக்கிறது. இராத்தாம்பரம் (கருஞ்சிவப்பு) என்பது மனுஷனுடைய சுபாவத்திற்கும், இரத்தத்திற்கும் அடையாளமாயிருக்கிறது.

ஊதா நிறம் என்பது நீல நிறமும், கருஞ்சிவப்பு நிறமும் மிகச் சரியாக கலந்த கலவையால் உண்டாகிறது. இது மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாகிய கிறிஸ்துவைச் சுட்டிக் காண்பிக்கிறது.

பரலோகத்தின் நீலமும், பூமியின் இராத்தாம்பரமும் (கருஞ்சிவப்பும்) கலந்து ஊதாவை உண்டாக்குகின்றன. இது இயேசுகிறிஸ்துவின் சுபாவத்தை வெளிப்படுத்துகிற ஒரு அழகான படமாக இருக்கிறது. தேவனாகவும், மனுஷனாகவும் மிகச் சரியாக கலந்து, இயேசுகிறிஸ்துவின் சுபாவம் ஒரு புதிய நிறமாக வெளிப்படுகிறது.

வேதவசனத்தில், ஊதா நிறத்திற்கு இரண்டு விதமான முக்கியத்துவம் உண்டு. இது ராஜரீகத்தையும், உபத்திரவப்படுதலையும் முக்கியப்படுத்துகிறது. அதாவது இது ஆளுகை செய்வதையும், பாடுபடுவதையும் சுட்டிக் காண்பிக்கிறது.

தேவனுடைய ராஜ்யத்தில், நீங்கள் முதலில் இந்தப் பூமியில் பாடுபடாமல், ஊதா நிறத்தை அணிந்து கொள்ள முடியாது. நாம் பாடுபடுவோம் என்றால், நாம் ஆளுகையும் செய்வோம்.

நான் உம்முடைய பிள்ளை, நன்றி பிதாவே. நான் பாடுபடுவதை நீடியபொறுமையொடு சகித்துக் கொள்வேன் என்றால், நான் உம்மோடு சேர்ந்து ஆளுகையும் செய்வேன் என்று விசுவாசித்து அறிக்கை செய்கிறேன். “அப்பா, பிதாவே” என்று கூப்பிடப் பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியை நான் பெற்றிருக்கிறேன். ஆமென்.