அன்புகூரும்படி விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்

 

ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை அன்போடும், மனதுருக்கத்தோடும் நடத்துவதுபோல,
தேவனும் என்னை அன்போடும், மனதுருக்கத்தோடும் நடத்துகிறார்

 

சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப் பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை
மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.
(யாக்கோபு 1:25) உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற
ராஜரீகப் பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மை செய்வீர்கள். (யாக்கோபு 2:8)

 

“உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோல பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்ற பிரமாணம் இரண்டு விதமாக
அழைக்கப்படுகிறது: “சுயாதீனப் பூரணப் பிரமாணம் (நம்மை விடுதலையாக்கக்கூடிய பூரணப் பிரமாணம்” மற்றும்
“ராஜரீகப் பிரமாணம்”. இந்தப் பூரணப் பிரமாணத்தில்தான் மற்ற எல்லாப் பிரமாணங்களும் உள்ளடங்கியிருக்கிறது.
நீங்கள் மெய்யாகவே மற்றவர்களை சுத்தமான இருதயத்தோடும், ஊக்கமான அன்போடும் நேசிக்கிறீர்கள் என்றால்,
நீங்கள் நிச்சயமாய் மற்ற கட்டளைகளையும் ஒழுங்காய் கடைபிடிப்பீர்கள்.

 

நீங்கள் அவைகளை மீற மாட்டீர்கள். அந்த ஒரு பிரமாணத்தைக் கடைபிடிப்பதன் மூலம், நீங்கள் மற்ற எல்லாப் பிரமாணங்களுக்கும் கீழ்ப்படிகிறீர்கள். அது
ராஜரீகப் பிரமாணமாகவும் இருக்கிறது. அது உங்களை விடுதலையாக்குகிற பூரணப் பிரமாணமாக இருக்கிறது. காரணம், அன்புகூருவதிலிருந்து
ஒருவரும் உங்களைத் தடுக்க முடியாது. அன்புகூரும்படி நீங்கள் உறுதியான ஒரு தீர்மானத்தை எடுத்து விட்டீர்கள்
என்றால், மற்றவர்கள் உங்களைக் குறித்து எல்லா வகையான மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்
வைக்கலாம், உங்களை மிகவும் மோசமாக நடத்தலாம், ஆனால் மற்றவர்களை அன்புகூருவதிலிருந்து அவர்களால்
உங்களைத் தடுக்க முடியாது.

 

முற்றிலும் விடுதலையாக்கப்பட்ட ஒரு நபரால்தான், மற்றவர்களை நேசிக்க முடியும்.
விடுதலையாய் மற்றவர்கள் மீது அன்புகூர்ந்ததில் இயேசுதான் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் இருக்கிறார்.
அதிகாரத்தில் இருந்தவர்கள் எல்லா வகையான மோசமான காரியங்களையும் அவருக்கு விரோதமாய் செய்தார்கள்.

 

அவர்கள் அவரை அடித்தனர்; அவர்கள் அவருடைய கைகளையும், கால்களையும் விறகைக் பிளக்கும் ஆப்பினால்
ஊடுருவினர்; பெரிய காட்டு முட்களால் ஆன முள்முடியை அவருடைய தலையில் வைத்தனர்; மிகவும் கசப்பான
வினிகரை அவருக்குக் குடிக்கக் கொடுத்தனர்; அவர்கள் அவரை மிகவும் தவறாக நடத்தினர்; அவர்கள் அவரை
நிந்தித்தனர். ஆனால் ஒன்றை மட்டும் அவர்களால் செய்ய முடியவில்லை. அன்புகூருவதிலிருந்து அவர்களால்
அவரைத் தடுக்க முடியவில்லை. அவர் கடைசிவரை அவர்களை நேசித்தார் (லூக்கா 23:34).

 

அப்படிப்பட்ட அன்பினால் நீங்கள் மற்றவர்களை நேசிக்கும்போது, ஒருவரும் உங்களைத் தடுக்க முடியாது.
அதாவது மற்றவர்களை அன்புகூருவதிலிருந்து ஒருவரும் உங்களைத் தடுக்க முடியாது. ஆகையால் அன்பு என்பது,
“விடுதலையாக்கும் பூரணப் பிரமாணம்” என்று அழைக்கப்படுகிறது.

 

பிதாவாகிய தேவனே, நீர் என்னை மிகவும் அக்கறையாய் விசாரிக்கிறீர், கவனித்துக் கொள்கிறீர். உமக்கு நன்றி.
எங்களை விடுதலையாக்கும் உம்முடைய பூரணப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து, மற்றவர்கள் மீது அன்புகூரும்படி நான்

உறுதியான ஒரு தீர்மானத்தை எடுக்கிறேன் என்று விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன்.
ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை அன்போடும், மனதுருக்கத்தோடும் நடத்துவதுபோல,
தேவனும் என்னை அன்போடும், மனதுருக்கத்தோடும் நடத்துகிறார்.

 

ஆமென்...