நீதியின் அளவுகோல்

 

ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை அன்போடும், மனதுருக்கத்தோடும் நடத்துவதுபோல,
தேவனும் என்னை அன்போடும், மனதுருக்கத்தோடும் நடத்துகிறார்

 

யோபுவின் இந்த வார்த்தைகள் முக்கியமானவை, குறிப்பிடத்தகுந்தவை. யோபு செய்யாத பாவங்களை, யோபுவே இங்கு
பட்டியலிடுகிறார். அவற்றைக் குறித்த குற்ற உணர்வும் அவருக்குள் இல்லை. ஆனால் இன்று கிறிஸ்தவர்கள் என்று
தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்களில் பலர், இந்தப் பாவங்களைக் குறித்து குற்ற உணர்வுள்ளவர்களாக
வாழ்கின்றனர்.

 

எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப் போகப் பண்ணி,
தாய் தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ? (யோபு 31:16-17).
மூன்று வகையினரை யோபு இங்கு பட்டியலிடுகிறார்: ஏழை எளியவர்கள், விதவைகள், தாய் தகப்பனில்லாத
அனாதைகள்.

 

அதாவது இங்கு யோபு சொல்ல வருவது இதுதான்: நான் அவர்களுக்குச் செய்ய வேண்டியதை, நான்
செய்யவில்லை என்றால், நான் ஒரு பாவி. என்னுடைய அடிப்படைப் பொறுப்புகளில் நான் தவறி விட்டேன். யோபு
தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்,

 

என் சிறுவயது முதல் அவன் தகப்பனிடத்தில் வளர்வதுபோல, என்னோடே வளர்ந்தான். நான் என் தாயின்
கர்ப்பத்திலே பிறந்தது முதல், அப்படிப்பட்டவர்களை கைலாகு கொடுத்து நடத்தினேன். ஒருவன்
உடுப்பில்லாததினால் மடிந்து போகிறதையும், ஏழைக்கு மூட வஸ்திரமில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது,
அவன் என் ஆட்டு மயிர்க் கம்பளியினாலே அனல் கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்தும்,
ஒலிமுக வாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை
நீட்டினதும் உண்டானால், என் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து, என் புயத்து எலும்பு முறிந்து போவதாக.
(18-22 வசனங்கள்)

 

உணவு, உடையில்லாதவர்களை, ஒருவரும் அக்கறையாய் விசாரிக்காத குடும்பங்களை அன்போடும்,
அக்கறையோடும் விசாரிக்க வேண்டிய விஷயத்தில் யோபு தவறவில்லை. இரக்கம் மற்றும் தாராளமாய் கொடுத்து
உதவுகிற கிரியைகளை தன்னுடைய கரம் தொடர்ந்து செய்யவில்லை என்றால், அவை தன்னுடைய சரீரத்தில்
இருக்கவே வேண்டாம் என்றும் யோபு சொல்கிறார்.

 

இன்றைக்கு இந்தப் பூமியில் வாழ்கின்ற பெரும்பாலானோருடைய
கண்ணோட்டத்திலிருந்து, யோபுவின் கண்ணோட்டம் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது. மோசேயின்
நியாயப்பிரமாணம் வருவதற்கு முன்பே, சுவிசேஷம் வெளிப்படுவதற்கு முன்பே, முற்பிதாக்களின் நீதியை இதுதான்
அளவிட்டது. இந்த வகையான நீதி, சபையில் திரும்பவும் வெளிப்பட வேண்டும் என்று தேவன் நம்மிடம்
எதிர்பார்க்கிறார்.

 

சபையோராகிய நாம் நம்முடைய சௌகரியமான இருக்கையை விட்டு எழுந்து, வெளியே வந்து,
உணவு - உடை - தங்குமிடம் இல்லாதவர்களிடம், விதவைகளிடம், அனாதைகளிடம் சென்று, அவர்களை அக்கறையாய்
அன்போடு விசாரிக்க வேண்டும்.

 

பிதாவாகிய தேவனே, நீர் என்னை மிகவும் அக்கறையாய் விசாரிக்கிறீர், கவனித்துக் கொள்கிறீர். உமக்கு நன்றி.
தேவையில் உள்ளவர்களை சபையில் அக்கறையாய் விசாரிக்க வேண்டும் என்ற இந்த வகையான நீதியை நான்
திரும்பக் கைக்கொள்ள வேண்டும் என்று தேவன் என்னிடம் எதிர்பார்க்கிறார். நானும் அதைச் செய்வேன் என்று
விசுவாசித்து, அறிக்கை செய்கிறேன். ஒரு தகப்பன் தன் பிள்ளைகளை அன்போடும், மனதுருக்கத்தோடும்
நடத்துவதுபோல, தேவனும் என்னை அன்போடும், மனதுருக்கத்தோடும் நடத்துகிறார்.

 

 

ஆமென்...