ஊழிய அறிக்கைகள்

அன்பானவர்களே,

மத்திய இந்தியாவில் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெற்ற ஊழியங்களைக் குறித்த அறிக்கை இதோ உங்கள் பார்வைக்கு. முதலில் நாங்கள் ஊழியம் செய்யவிருந்த பகுதிகளில் கிறிஸ்தவர்களுக்கு உபத்திரங்கள் இல்லை என்று நினை்ததோம். சத்தீஸ்கர் மாநிலம் மாவாேயிஸ்ட் தீவிரவாதிகளில் அச்சுறுத்தலுக்கு உள்ளான பகுதிகள் என்றும், நாங்கள் சென்ற மூன்று இடங்களும் கிறிஸ்தவர்கள் மிகுந்த உபத்திரவங்களுக்குள்ளான இடங்கள் என்றும் பின்னர் அறிந்தோம். இந்த மூன்று இடங்களிலும் மனந்திரும்பிய ஒருவருக்கும் ஞானஸ்நானம் கொடுக்க முடியாது. எங்களுக்கு மொழி பெயர்த்த போதகர் ஒருவர் மனந்திரும்பிய ஒருவருக்கு ஞானஸ்நானம் கொடுத்ததற்காக சிறைக்கு அனுப்பப்பட்டு மூன்று மாதங்கள் முன்புதான் வழக்குகளிலிலருந்து விடுபட்டு வெளியே வந்திருந்தார். ஜபல்பூரில் மனந்திரும்பியவர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குதான் ஞானஸ்நானம் கொடுப்பபார்கன் என்று என்னிடம் கூறினார்கள்.

துர்க், பிலாய் (சத்தீஸ்கர் மாநிலம்) நவம்பர் 21 மற்றும் 22,

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் முதலாவது கருத்தரங்கை துர்க் மற்றும் பிலாய் என்ற இரட்டை நகரங்களில் நடத்தினோம். பிலாயில் புகழ்பெ்ற்ற பெரிய இரும்பு எஃகு தொழிற்சாலை உள்ளது. முதல் நாள் போதகர்கள் மற்றும் ஊழியர்கள் கருத்தரங்கில், பெண்கள் மற்றும் சில வாலிபரைத் தவிர 170 போதகர்களின் கலந்துக் கொண்டனர். இந்த நகரமானது பல சுவிசேஷக் கூட்டங்களையும், அடையாள அற்புத சுகமளிக்கும் கூட்டங்களையும் கண்டுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக போதக ஊழியத்தை ஒருபோதும் காணவில்லை. எனவே மிகுந்த எதிர்பார்ப்போடும் மகிழ்ச்சியோடும் எங்களை ஏற்றுக்கொண்டார்கள். சாதாரண செய்திகள் கூட அங்கிருந்த போதகர்களும் புதியதாகவும் கருத்தாழம் மிகுந்த போதனையாகவும் இருந்தது.

5 வருடங்களாக இரவில் ஒன்றரை மணிநேரம் மட்டுமே தூங்க முடிந்த, பிசாசினால் பிடிக்கப்பட்டு தூங்க முடியாமல் தவித்த ஒரு சகோதரி அங்கு வந்திருந்தார்கள்.

அவர்கள் சிலுவையின் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள்ளிருந்த பிசாசு வெளிப்பட ஆரம்பித்தது. ஆகவே தேநீர் இடைவேளையின் போது ஜெபிக்கும்படி அவர்களை அழைத்துக் கொண்டு வந்தார்கள். பாஸ்டர்.டேனியல் அந்தப் பிசாசைக் கடிந்துக் கொண்டபோது அந்த பெண்மணி விடுவிக்கப்ப்டடார்கள். அவர்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்று முழு இரவும் நன்றாகத் தூங்கினார்கள். அவர்கள் அடுத்த நாள் கூட்டத்திற்கு வந்து தான் முழுவதுமாக விடுவிக்கப்பட்டதை சாட்சியாகக் கூறினார்கள்.

அடுத்த பகுதியில் ஆவிக்குரிய போராட்டத்தைக் குறித்து போதித்தோம். நாங்கள் இந்த பாடத்தைப் போதித்தபொழுது அங்கிருந்த போதகர்கள், கிறிஸ்தவ சமுதாயத்தில் நடந்த முக்கிய நிகழ்வு கள் எல்லாம் இந்த இரட்டை நகரங்களில் தான் ஆரம்பமானது என்று கூறினார்கள். அதேபோல் இந்த ஆவிக்குரிய போராட்டத்தை எப்படிப் போராடுவது என்று தேவன் அவர்களுக்கும் கற்பித்ததின் மூலம் அவர்களது மாநிலத்திற்காகப் போராடி தேவ தயவையும், எழுப்புதலையும் காணும் நேரம் வந்துவிட்டது என்று அறிக்கைச் செய்து சென்றனர்.

இந்த ஊழியத்தி மூலம் சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள எல்லா முக்கிய நகரங்களிலும் டெரிக் பிரின்ஸ் ஊழியங்களுக்கு வாசல்கள்கள் திறந்தது. 2014 பிப்ரவரி 14 முதல் 19-ம் தேதி வரை உள்ள நாட்களில் ராய்ப்பூர், ஜகதல்பூர், அம்பிகாபூர் மற்றும் பேண்ட்ரா ரோடு ஆகிய நகரங்களில் கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தேவ ஆவியானவர் இந்தக் கூட்டங்களில் மக்கள் மத்தியில் அசைவாடியது அற்புதமாக இருந்தது. இரண்டாவது நாள் கூட்டத்தில் பல்வேறு திருச்சபைகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் தேவனுடைய வல்லமை இறங்கியதைக் கண்டோம். கூட்டத்தின் முடிவில் வாலிபர்கள் ஒரு குழுவாக வந்து, இதுவரை எத்தனையோ அடையாள அற்புதக் கூட்டங்களில் கலந்துக் கொண்டோம் ஆனாலும் எங்கள் இருதயத்தில் ஒரு தாகமும் திருப்தியின்மையும் இருந்தது. இந்தக் கருத்தரங்கில் கலந்துக் கொண்ட போது, அந்த வெற்றிடம் நிரம்பிவிட்டது. அந்தத் தாகமானது தேவனை அறியும் தாகம் அது வேதத்தை ஆழமாகப் படிப்பதின் மூலம் இன்னும் அவரை அதிகமாக அறிந்துக் கொள்ள முடியும். அது தான் அந்த தாகத்தைத் தீர்த்து திருப்தியைத் தரமுடியும் என்று புரிந்துக் கொண்டனர். அவர்கள் இன்னும் பல போதனை நூல்களைப் பெற்று பயன்பெற எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அவர்களை உற்சாகப்படுத்தினோம்.

நாக்பூர் (மஹாராஷ்டிரா) 2013 நவம்பர் 24 முதல் 26 வரை, எங்கள் ஊழியம் பிரயாணத்தின் இரண்டாவது பகுதி "இந்தியாவின் மையம்" என்று அழைக்கப்படும் நாக்பூரில் நடைபெற்றது. இந்த நகரில் ஓரளவு கிறிஸ்தவர்களும் நல்ல ஒரு போதகர் ஐக்கியமும் இருந்தது. நவம்பர் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பாஸ்டர்.அஜய் மஸி அவர்களுடைய திருச்சபை ஆராதனையில் ஊழியம் செய்தோம். அவர் 2013 ஜீன் மாதம், அவரது சரீரத்தின் பல உறுப்புகள் செயலற்றுப் போய் மரணத்தருவாயில் இருந்தார். ஆனால் தேவன் அவரை மறுபடியும் சுகத்தோடு எழுப்பினார். அவர் டெரிக் பிரின்ஸ் அவர்களுடைய புத்தகங்களை 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாசித்து வருவதாகவும், தனிப்பட்ட முறையில் அதன் மூலம் பல ஆசீர்வாதங்களைப் பெற்றுள்ளதாகவும் கூறி எங்களை மகிழ்ச்சியோடு அவரது திருச்சபையில் ஊழியம் செய்ய அழைத்தார். அந்த ஆராதனையில் சுமார் 300 பேர் கலந்துக் கொண்டனர். நாங்கள் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்து, வியாதியுள்ளவர்களுக்காக ஜெபித்தபோது அநேகர் விடுதலையையும் சுகத்தையும் பெற்றனர். முதுகுத் தண்டுவடத்தின் கீழ்ப்பகுதியில் மிகுந்த வலியோடு வந்த ஒரு இளம் வாலிபர் அந்த வலி நீங்கி பூரணசுகம் பெற்றான்.

அன்று மாலையில் அவர்களது கிளை சபையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊழியம் செய்தோம்.

அடுத்த நாள் கலையில் முதல் நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் எதிர்பார்த்ததற்கும் மேலான எண்ணிக்கைக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொள்ள விரும்பினர். எனவே இதை ஒழுங்குச் செய்த போதகர், பகுதிநேர ஊழியர்கள் மற்றும் அடுத்தக்கட்ட தலைவர்கள் 250 பேரைத் தெரிந்தெடுத்தனர். இந்தக் கருத்தரங்கில் தெய்வீகப் பரிமாற்றம், சாபத்திலிருந்து ஆசீர்வாதம் மற்றும் ஆவிக்குரிய போராட்டம் ஆகிய பாடங்கள் போதிக்கப்பட்டன. இதில் கலந்துக் கொண்டவர்களைப் பார்த்தபோது அப்போஸ்தலர் 17:11-ல் உள்ள மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று வேதவாக்கியங்களை ஆராய்ந்துப் பார்த்ததினால் நற்குணசாலியிருந்தார்கள் என்ற வசனம் தான் எனக்கு நினைவிற்கு வந்தது.

அடுத்த நாள் அங்கு நடைபெற்ற போதகர்கள் கருத்தரங்கில் சுமார் 105 போதகர்களும் சில பெண்களும் கலந்தக் கொண்டார்கள். வழக்கம் போல நாங்கள் ஜெபம் செய்தோம் அநேகர் விடுதலைப் பெற்றதைக் கண்டோம். ஆனால் மிகுந்த ஆச்சரியமூட்டும் ஒரு சாட்சி கூட்டத்தை நடத்திய போதகரின் குடும்பத்திலிருந்தே வந்தது. இடது பக்கத்திலுள்ள போட்டோவில் காணப்படும் திருமதி. மீனா மஸி என்ற சகோதரி தன்னுடைய கணவரின் குடும்பத்தில் காணப்படும் எல்லா வியாதிகளுக்கும், கண்பார்வைக் குறைபாடுகளுக்கும், ஒரு சாபம் காரணமாக இருப்பதைப் பகுத்தறிந்தார். அவர்கள் சாபங்கள் அல்லது ஆசீர்வாதங்கள் என்ற புத்தகத்தை இந்தியாவில் பலமுறைப் படித்து அந்த சாபங்களை உடைத்தும் இன்றும் சில காரியங்களில் குறைவுபடுவதை உணர்ந்தார். முதல் நாள் நான் யூதருக்கு விரோதமாகப் பேசுவதாலோ அல்லது நடப்பதாலோ வரும் சாபத்தைக் குறித்தும், இந்த சாபத்தின் கீழிருந்த சில இந்தியர்களுடைய சாட்சிகளைக் குறித்தும் பேசினேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அந்த சகோதரிக்கு அவர்களுடைய கணவரின் தாத்தா ஹிட்லரின் தீவிர ஆதரவாளராக இருந்து யூதர்களை எவ்வளவு அலட்சியப்படுத்தினார் என்பதையும் அந்த மனிதர் ஹிட்லரைப் புகழ்ந்து ஒரு கவிதையை எழுதியதை அறிந்த அந்த நாட்களில் இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசு அவரை துரோகி என்று கைது செய்ய வந்தனர் என்பதையும் நினைவுப்படுத்தினார். அப்பொழுது அந்த சகோதரி அவர்களது குடும்பத்தைப் பின் தொடர்ந்து வரும் சாபங்களுக்கான காரணத்தையும் புரிந்துக் கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் இன்னொரு போதகர் வந்து அவர் பொறுப்பாக இருக்கும் சபையில் பல போராட்டங்களைச் சந்தித்து வந்ததால், பொறுப்புகளிலிரந்து தன்னை விடுவிக்குமாறு தன்னுடைய தலைவர்களிடம் திரும்பிச் சென்று கேட்கலாம் என்று எண்ணியிருந்தார். ஆனால் ஆவிக்குரிய போராட்டம் என்ற போதனையைக் கேட்டவுடன் அவ்ர உற்சாகப்படுத்தப்பட்டு அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டு எழும்பி நின்று வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடு யுத்தம் செய்து அவருடைய ஜெயத்தை பெற்றுக் கொள்ளப் போவதாகக் கூறினார்.

ஜபல்பூர் (மத்தியப் பிரதேசம்) - 2013 நவம்பர் 28

நாக்பூரில் 3 நாட்கள் மகிமையான ஊழியங்களை முடித்து பிரயாணப்பட்டு நகரங்களுக்கும் இடையே 300கி.மீ தூரம் மட்டுமே இருந்தாலும் ஒரு நாள் முழுவதும் பிரயாணப்பட வேண்டியிருந்தது. மத்திய இராணுவப் படையின் ஆறு மாநிலங்களுக்கான தலைைம அலுவலகம் அமைந்துள்ள ஜபல்பூர், வட இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும்.

டெரிக் பிரின்ஸ் ஊழியப் பங்களாராகிய Dr. பிரீத்தா ஜேம்ஸ் என்ற இளம்பெண் தன்னுடைய போதகரின் ஒத்துழைப்போடு பெறுமுயற்சி செய்து இந்தக் கருத்தரங்கை ஒருங்கிணைக்க உதவி செய்தார்கள். இதில் சுமார் 140 போதக்ரகளும் 30 பெண்களும் (போதகர்களின் மனைவி மற்றும் உதவி ஊழியர்கள்) கலந்து கொண்டனர். நியு லைப் பெல்லோஷிப் மூலம் கிராமப் பகுதிகளில் ஊழியம் செய்யும் போதகர்கள் பலர் இதில் கலந்துக்கொண்டது பரவசமாயிருந்தது. இங்கும் போராட்டத்தோடும், சோர்வுற்றும் இருந்த போதகர்கள் பலர் உற்சாகப்படுத்தப்பட்டு, வலுவூட்டப்பட்டு புத்துணர்வுடன் தாங்கள் அழைக்கப்பட்ட அழைப்பை நிறைவேற்ற பெலனடைந்தனர்.

நாங்கள் ஊழியம் செய்து திரும்பி வ்நத பிறகு எங்களுக்கு வந்த ஒரு இ-மெயில் இதோ உங்கள் பார்வைக்கு :

"இங்கு நடைபெற்ற கருத்தரங்கைக் குறித்து மிகவும் நல்ல அறிக்கைகளும், சிறப்பான கருத்துக்களும் எங்களு்ககு வந்துள்ளது. இந்தக் கருத்தரங்கில் கலந்தக் கொண்ட போதகர்கள் உங்கள் போதகத்தால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அது மட்டுமின்றி நீங்கள் இலவசமாக வழங்கிய டெரிக் போதனைகள் அடங்கிய புத்தகங்கள் அவர்களுக்கு மிகவும்  பயனுளளதாக இருந்தது. குறிப்பாக எங்கள் கிராம ஊழியர்களுக்கு ஆழமான மற்றும் தெளிவான தேவ வார்த்தையின் அடிப்படையிலான டெரிக்கின் புத்தகங்கள் பேராசீர்வாதமாக இருக்கிறது. இந்தக் கருத்தரங்கிற்காக நாங்கள் தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். டெரிக் பிரின்ஸ் ஊழியகளிலுள்ள உங்கள் ஒவ்வொருவரின் கடின உழைப்பிற்காகவும், முயற்சிகளுக்காகவும் நாங்கள் உங்களுக்கு நன்றி கூறுகிறோம்" - Dr. பிரீத்தா ஜேம்ஸ்

கனி நிறைந்த இந்த ஊழிய நாட்களுக்காக கர்த்தருக்கு நன்றி கூறுகிறோம். எங்களுக்காக ஜெபித்து எங்களை காணிக்கைகளால் தாங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி.


பாஸ்டர். எல்சி டேனியல்
பாஸ்டர். டேனியல்
தேசிய இயக்குநர்
டெரிக் பிரின்ஸ் ஊழியங்கள் - இந்தியா